இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சென். ஜோர்ஜ்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் களமிறங்கியுள்ளது.
>>த்ரில் வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<<
தென்னாபிரிக்காவை பொருத்தவரை முதல் போட்டியில் உபாதைக்குள்ளான ஜெரா்ல்ட் கோட்ஷியா மற்றும் வியான் முல்டர் ஆகியோருக்கு பதிலாக டேன் பெட்டர்சன் மற்றும் ரயான் ரிக்கில்டன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பதினொருவர்
பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், கமிந்து மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா (தலைவர்), பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ
தென்னாபிரிக்கா பதினொருவர்
டொனி டி ஷோர்ஷி, எய்டன் மர்க்ரம், ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ், ரயான் ரிக்கில்டன், தெம்பா பௌவுமா (தலைவர்), டேவிட் பேடிங்ஹம், கெயல் வெரைன், மார்கோ ஜென்சன், டேன் பெட்டர்சன், கேஷவ் மஹாராஜ், காகிஸோ ரபாடா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<