பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற முத்தரப்பு T20 தொடரின் இரண்டாவது போட்டியில், ஜிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு எதிராக 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
>>இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தென்னாபிரிக்க அணியில் ன்கிடி<<
முன்னதாக பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் வைட்வொஷ் தோல்வியினைத் சந்தித்திருந்த இலங்கை, முத்தரப்பு T20 தொடரினை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜிம்பாப்வேயிற்கு வழங்கினார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர், பிரையன் பென்னட் மற்றும் சிக்கந்தர் ரஷாக ஆகியோர் சிறந்த பங்களிப்பினை வழங்கினர்.
இதனால் ஜிம்பாப்வே 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் பெற்றது. ஜிம்பாப்வே துடுப்பாட்டத்தில் பிரையன் பென்னேட் 42 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுக்க, சிக்கந்தர் ரஷா 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க தனது அனுபவத்தைப் பயன்படுத்தி 4 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் அறிமுகம் பெற்ற எஷான் மலிங்க 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
>>இளையோர் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது<<
பின்னர் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப வீரர்களாக களம் வந்த பெதும் நிஸ்ஸங்காவும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் சோபிக்கத் தவறினர்.
அதன்பின்னர் மத்தியவரிசை வீரர்களும் சொதப்ப இலங்கை அணியானது 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 95 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களில் அணித் தலைவர் தசுன் ஷானக மட்டும் தனியாளாகப் போராடி 25 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே பந்துவீச்சில் ப்ரட் எவான்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ரிச்சட் ன்கரவா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ரஷா தெரிவானார். இந்த முக்கோண T20I தொடரில் இலங்கை அடுத்ததாக நாளை (22) பாகிஸ்தானை எதிர்கொள்கின்றமு குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Brian Bennett | c Kusal Perera b Wanindu Hasaranga | 49 | 42 | 5 | 1 | 116.67 |
| Tadiwanashe Marumani | c & b Maheesh Theekshana | 10 | 6 | 2 | 0 | 166.67 |
| Brendan Taylor | b Eshan Malinga | 11 | 9 | 1 | 0 | 122.22 |
| Sikandar Raza | c Dasun Shanaka b Dushmantha Chameera | 47 | 32 | 3 | 2 | 146.88 |
| Ryan Burl | b Wanindu Hasaranga | 18 | 11 | 0 | 2 | 163.64 |
| Tony Munyonga | lbw b Wanindu Hasaranga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Tashinga Musekiwa | b Eshan Malinga | 11 | 7 | 0 | 1 | 157.14 |
| Brad Evans | run out (Kusal Mendis) | 4 | 5 | 0 | 0 | 80.00 |
| Tinotenda Maposa | not out | 5 | 4 | 0 | 0 | 125.00 |
| Graeme Cremer | not out | 3 | 4 | 0 | 0 | 75.00 |
| Extras | 4 (b 0 , lb 3 , nb 1, w 0, pen 0) |
| Total | 162/8 (20 Overs, RR: 8.1) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Nuwan Thushara | 3 | 0 | 30 | 0 | 10.00 | |
| Maheesh Theekshana | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
| Dushmantha Chameera | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
| Eshan Malinga | 4 | 0 | 27 | 2 | 6.75 | |
| Wanindu Hasaranga | 4 | 0 | 32 | 3 | 8.00 | |
| Dasun Shanaka | 1 | 0 | 13 | 0 | 13.00 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Pathum Nissanka | c Graeme Cremer b Richard Ngarava | 0 | 5 | 0 | 0 | 0.00 |
| Kusal Mendis | run out (Tony Munyonga) | 6 | 12 | 0 | 0 | 50.00 |
| Kusal Perera | c Richard Ngarava b Tinotenda Maposa | 4 | 5 | 1 | 0 | 80.00 |
| Bhanuka Rajapakse | b Brad Evans | 11 | 18 | 1 | 0 | 61.11 |
| Dasun Shanaka | c Brendan Taylor b Ryan Burl | 34 | 25 | 2 | 2 | 136.00 |
| Kamindu Mendis | b Sikandar Raza | 9 | 9 | 0 | 0 | 100.00 |
| Wanindu Hasaranga | c Brian Bennett b Graeme Cremer | 8 | 13 | 0 | 0 | 61.54 |
| Dushmantha Chameera | c Tinotenda Maposa b Richard Ngarava | 1 | 2 | 0 | 0 | 50.00 |
| Maheesh Theekshana | b Brad Evans | 8 | 16 | 1 | 0 | 50.00 |
| Eshan Malinga | c Graeme Cremer b Brad Evans | 1 | 6 | 0 | 0 | 16.67 |
| Nuwan Thushara | not out | 1 | 9 | 0 | 0 | 11.11 |
| Extras | 12 (b 2 , lb 4 , nb 0, w 6, pen 0) |
| Total | 95/10 (20 Overs, RR: 4.75) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Richard Ngarava | 4 | 0 | 15 | 2 | 3.75 | |
| Tinotenda Maposa | 3 | 0 | 17 | 1 | 5.67 | |
| Brad Evans | 4 | 0 | 9 | 3 | 2.25 | |
| Sikandar Raza | 4 | 0 | 23 | 1 | 5.75 | |
| Graeme Cremer | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
| Ryan Burl | 1 | 0 | 8 | 1 | 8.00 | |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















