Home Tamil இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் தோல்வி

இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் தோல்வி

Sri Lanka tour of India 2025 - Womens T20I Series 

19

விசாகப்பட்டினத்தில் நேற்று (21) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20I போட்டியில்  இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20i தொடரில் ஆடுகின்றதுஇந்த நிலையில் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய மகளிர் அணிஇலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை வீராங்கனைகள் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் காரணமாக 20 ஓவர்களில் விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்துக் கொண்டனர்இலங்கை அணியின் தரப்பில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரட்ன அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.  

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் தீப்தி சர்மாகிராந்தி கௌட் மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர். 

தொடர்ந்து 122 ஓட்டங்கள் என்கிற போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இந்திய மகளிர் அணிக்கு ஷெபாலி வெர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் ஏமாற்றம் அளித்த போதும் ஜெமிமா ரொட்ரிக்கஸ் அதிரடியாக ஆடி இந்திய மகளிர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.  

பின்னர் இந்திய மகளிர் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களுடன் அடைந்தது 

இந்திய மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஜெமிமா ரொட்ரிக்கஸ் 44 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரொட்ரிக்கஸ் தெரிவு செய்யப்பட்டார்.  

ஸ்கோர் விபரம் 

Result
Sri Lanka Women
121/6 (20)
India Women
122/2 (14.4)
Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne run out (Kranti Goud) 39 43 1 1 90.70
Chamari Athapaththu b Kranti Goud 15 12 3 0 125.00
Hasini Perera c Kranti Goud b Deepti Sharma 20 23 2 0 86.96
Harshitha Samarawickrama b Shree Charani 21 23 2 0 91.30
Nilakshika Silva run out (Amanjot Kaur) 8 8 0 0 100.00
Kavisha Dilhari run out (Shree Charani) 6 5 0 0 120.00
Kaushini Nuthyangana not out 9 6 1 0 150.00
Extras 3 (b 1 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 121/6 (20 Overs, RR: 6.05)
Bowling O M R W Econ
Kranti Goud 3 0 23 1 7.67
Arundhati Reddy 4 0 23 0 5.75
Deepti Sharma 4 1 20 1 5.00
Vaishnavi Sharma 4 0 16 0 4.00
Shree Charani 4 0 30 1 7.50
Amanjot Kaur 1 0 8 0 8.00

Batsmen R B 4s 6s SR
Smriti Mandhana c Nilakshi de Silva b Inoka Ranaweera 25 25 4 0 100.00
Shafali Verma c Shashini Gimhani b Kawya Kavindi 9 5 2 0 180.00
Jemimah Rodrigues not out 69 44 10 0 156.82
Harmanpreet Kaur not out 15 16 0 0 93.75
Extras 4 (b 0 , lb 0 , nb 2, w 2, pen 0)
Total 122/2 (14.4 Overs, RR: 8.32)
Bowling O M R W Econ
Malki Madara 2 0 19 0 9.50
Kawya Kavindi 3 0 20 1 6.67
Chamari Athapaththu 2 0 16 0 8.00
Shashini Gimhani 2 0 32 0 16.00
Inoka Ranaweera 3.4 0 17 1 5.00
Kavisha Dilhari 2 0 8 0 4.00

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<