ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு

8
Sri-Lanka

தென்கொரியாவில் 13ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இளையோர் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை வலைப்பந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>தென்னாப்பிரிக்க T20I அணியின் தலைவர் பதவியிலும் மாற்றம்<<

சாலினி நீஷா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இளம் வலைப்பந்து அணியில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்களில் பிரகாசித்த வீராங்கனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் இறுதியாக நடைபெற்ற இளையோர் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை மூன்றாம் இடம் பெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கை குழாத்தில் காணப்பட்டிருந்த நேதாங்க குணரட்ன, பாஷி உடகெதர மற்றும் மினாகி கன்காணிகே ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 15 வயது மாத்திரம் நிரம்பிய நுகேகொட சுஜாதா வித்தியாலய மாணவி  மிதும் கீத்சிரியும் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறைக்கான இலங்கை வலைப்பந்து அணியானது யசிந்த் விஜேசிங்க மூலம் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வலைப்பந்து குழாம்

 

பாஷினி உடகெதர, மினகி கங்காணிகே, சித்தேரா சமரக்கோன், மிஹின்தும் கீர்த்திசிரி, ஷாலினி நீஷா, நெதங்க குணரட்ன, திரந்தி காரியவசம், மனோதா ரணசிங்க, அனுரதா களுவராச்சி, சரனி வத்சலா, துமல்கா ஏக்கநாயக்க, ஷனோன் டி சில்வா, கசுனி வத்சலா, தெசானி ஒசாதி, ஹஷ்மிலா ஹேசானி

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<