சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP இன்) அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பரபரப்பு மிக்க போட்டிகள் கொண்ட ஆண்டாக மாறுகின்றது.
அதன்படி இந்த ஆண்டில் இலங்கையின் ஆடவர் மற்றும் மற்றும் மகளிர் அணிகள் மூன்று வகையான போட்டிகளிலும் (Test, ODI, T20) பல தொடர்களில் பங்கேற்கவுள்ளதுடன், ஐ.சி.சி (ICC) இன் முக்கியமான தொடர்களிலும் விளையாடவுள்ளன.
ஆடவர் அணி
2026ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு முக்கிய நிகழ்வாக, இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் அமைகின்றது. சுமார் 14 வருட இடைவெளியின் பின்னர் சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு T20 உலகக் கிண்ணம் ஒன்றினை நடாத்தும் வாய்ப்பு கிட்டியிருக்கின்றது. உலகக் கிண்ணம் ஒரு பக்கமிருக்க இலங்கை அணியானது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
மகளிர் அணி
இலங்கை மகளிர் அணியினை பொறுத்தவரை பல்வேறு இருதரப்பு தொடர்களுடன் 2026ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஐ.சி.சி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானதாக மாறுகின்றது.
இலங்கை ஆடவர் அணியின் போட்டி அட்டவணை – 2026
ஜனவரி:
- பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் (3 T20 போட்டிகள்)
- இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
பெப்ரவரி – மார்ச்:
- ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணம் (இலங்கை மற்றும் இந்தியா)
- இலங்கை அணியின் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
மே:
- இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் (2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 T20 போட்டிகள்)
ஒகஸ்ட்:
- இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் (2 டெஸ்ட், 3 T20 போட்டிகள்)
செப்டம்பர்:
- இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
ஒக்டோபர் – நவம்பர்:
- இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் (முக்கோண ஒருநாள் தொடர் – 2 டெஸ்ட், 4 ஒருநாள், 3 T20 போட்டிகள்)
டிசம்பர்:
- இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
இலங்கை மகளிர் அணியின் போட்டி அட்டவணை – 2026
பெப்ரவரி:
- இலங்கை மகளிர் அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
ஏப்ரல்:
- இலங்கை மகளிர் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
ஜூன்:
- ஐ.சி.சி மகளிர் T20 உலகக் கிண்ணம் (இங்கிலாந்து)
ஜூலை:
- பாகிஸ்தான் மகளிர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் (3 ஒருநாள் & 3 T20 போட்டிகள்)
டிசம்பர்:
- அவுஸ்திரேலிய மகளிர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் (3 ஒருநாள் போட்டிகள்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















