பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Bangladesh 2024

162

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குசல் மெண்டிஸின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் பாரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை. 

LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ விளையாடி ஒருநாள் போட்டிகளில் கவனத்தை ஈர்த்திருந்தார். எனினும் அவர் உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அசித பெர்னாண்டோவுக்கு பதிலாக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள லஹிரு குமார அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டேனியலுக்கு பதிலாக T20I போட்டிகளில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ள கமிந்து மெண்டிஸிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களை தவிர்த்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய ஏனைய அனைத்து வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, பெதும் நிஸ்ஸங்க, சாமிக்க கருணாரத்ன, டில்சான் மதுசங்க மற்றும் சதீர சமரவிக்ரம போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புதன்கிழமை (13) டாக்காவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம் 

குசல் மெண்டிஸ் (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, சாமிக்க கருணாரத்ன, அகில தனன்ஜய, டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுசான், லஹிரு குமார 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<