தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 2 விக்கெட்டுகளால் போராடி வெற்றியீட்டிய இலங்கை வளர்ந்து வரும் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என ‘வைட்வொஷ்’ செய்தது.
அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளரந்து வரும் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் அணிக்கும்……
கொழும்பு, SSC மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணித் தலைவர் டோனி டி சொர்சி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும், தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களால் நிலைத்து ஆட முடியவில்லை.
முதல் 5 விக்கெட்டுகளையும் 85 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த தென்னாபிரிக்க அணிக்கு மத்திய வரிசையில் அணித்தலைவர் சொர்சி மற்றும் ஈதன் பொஸ்ச் ஆகியோர் கைகொடுத்தனர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
எனினும் வெறும் இரண்டு ஓட்டங்கள் இடைவெளியில் சொர்சி மற்றும் பொஸ்ச் ஆகியோர் தலா 48 ஓட்டங்களை பெற்று அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி மீண்டும் தடுமாற்றத்திற்கு முகம்கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவின் கடைசி வரிசை வீரர்களை குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை வளர்ந்து வரும் அணியினரால் முடிந்தது. இதனால் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 42.3 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து.
தென்னாபிரிக்காவை சுழலால் மிரட்டிய தனஞ்சய ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை அணியின்……
இலங்கை வளர்ந்து வரும் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இலங்கை அணிக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் வன்டர்சே இந்த ஒருநாள் தொடரில் அதிகபட்சமாக மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அமில அபொன்சோ 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்ற நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் இரண்டாவது போட்டியில் அணித்தலைவராக செயற்பட்டவருமான திமுத் கருணாரத்ன இன்றைய போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார். இலங்கை வளர்ந்துவரும் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட தனேஷ் சந்திமால் இலங்கை டி-20 அணிக்கு திரும்பிய நிலையில் 21 வயது வீரரான சரித் அசலங்கவே அணித்தலைவராக செயற்பட்டார்.
இந்நிலையில் எட்ட முடியுமான இலக்குடன் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 32 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த போதும் ஆரம்ப விரர் சதீர சமரவிக்ரம இரண்டாவது விக்கெட்டுக்கு அசலங்கவுடன் இணைந்து 61 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.
38 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்ற சரித் அசலங்க ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் (04) மற்றும் ஷம்மு அஷான் (03) ஓற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
எனினும் சமரவிக்ரம ஒருமுனையில் பெறுப்புடன் ஆடியதோடு அவர் 5ஆவது விக்கெட்டுக்கு ஜெஹான் டானியலுடன் சேர்ந்து 74 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். இதன்மூலம் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றியை நெருங்கியபோது அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோக நெருக்கடிக்கு முகம்கொடுத்தது.
40ஆவது ஓவரின் முதல் பந்தில் 68 ஓட்டங்களை பெற்றிருந்த சமரவிக்ரம ஆட்டமிழந்ததோடு அடுத்த பந்திலேயே செஹான் மதுஷங்க ஓட்டம் இன்றி ரன் அவுட் ஆனார். ஒரு ஓவர் கழித்து 50 ஓட்டங்கள் பெற்றிருந்த ஜெஹான் டானியல் ஆட்டமிழந்ததொடு பின்வரிசையில் வந்த வன்டர்சேயும் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனால் இலங்கை வளர்ந்து வரும் அணி 198 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்கு முகம்கொடுத்தது.
இந்நிலையில் 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாமிக்க கருணாரத்ன (ஆட்டமிக்காது 11) மற்றும் அபொன்சோ (ஆட்டமிழக்காது 19) தமது விக்கெட்டுகளை காத்துக் கொண்டு இலங்கை அணியை வெற்றி வரை அழைத்துக் சென்றனர்.
உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க
கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க…..
இதன்படி இலங்கை அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தது. தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பில் நன்ரே பெர்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரையும் இலங்கை வளர்ந்து வரும் அணி 1-0 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்




















