இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சி அறிமுகம்

120

இலங்கை கிரிக்கெட் அணிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜேர்சி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளரான moose clothing நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இப்புதிய ஜெர்சி மேம்படுத்தப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட துணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஜேர்சிகளில் வீரர்களின் வசதியை அதிகரிக்கும், சுவாசத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் உயர் தீவிர போட்டிகளில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வடிவமைப்பு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இலங்கைஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் T20I தொடர்களின் போது வீரர்கள் இப்புதிய ஜேர்சியை அணிந்து விளையாடவுள்ளனர். அதேபோல, சமீபத்தில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இலங்கை அணி வீரர்கள் புதிய டெஸ்ட் ஜேர்சியை அணிந்து விளையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

டெஸ்ட் ஜேர்சியானது பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் சிறந்த கலவையாக, அதிகபட்ச இயக்கம், நீடித்த பயன்பாடு மற்றும் சுவாசத்தன்மைக்காக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் மஞ்சள்நீல நிறங்களுடன் இணைக்கப்பட்ட வலை துணிப்பகுதிகள் (mesh panels) வீரர்கள் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாடும்போது குளிர்ச்சியாகவும், கவனமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. 

ஒருநாள் ஜேர்சி 80களின் பிற்பகுதி மற்றும் 90களில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அணிந்த ஜேர்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் ஜேர்சி கடற்படை நீல நிறத்திலும் தடிமனான மஞ்சள் நிறத்திலும் உள்ளது, இது இலங்கையின் கிரிக்கெட் பயணத்தை வடிவமைத்த காலப்பகுதியின் நினைவுகளை மீட்டுத் தருகிறது. இலேசான, சுவாசிக்கக்கூடிய துணிகளால் தயாரிக்கப்பட்டுள்ள இது நவீன செயல்திறனுடன் பழைய காலத்து கவர்ச்சியை வழங்குகிறது 

T20I ஜேர்சி இலங்கையின் உலகத்தரம் வாய்ந்த ஆடை பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் மென்மையான கோடுகளுடன் பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் ஆழமனான நீல நிறத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது T20I போட்டிகளின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப வேகம், சுறுசுறுப்பு மற்றும் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய ஜேர்சி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கை கிரிக்கெட் சபை, தனது செயல்திறன் எல்லைகளை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கும் விளையாட்டு அமைப்பாக, எங்கள் பாரம்பரியம், செயல்திறன் மற்றும் தேசிய பெருமையை சரியாக இணைக்கும் புதிய ஜேர்சியை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது. இப்புதிய ஜேர்சி எமது வீரர்களுக்கு சிறப்பாக செயல்பட தேவையான ஆறுதலை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,’ என்று அவர் கூறினார். 

இதனிடையே, ஆழழளந ஊடழவாiபெ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசிப் ஓமார் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஜேர்சிகள் விளையாட்டு உடைகளுக்கு மேலானவைஅவை பாரம்பரியத்திலிருந்து புத்தாக்கம் வரை இலங்கை கிரிக்கெட்டின் கதையைக் கொண்டாடுகின்றன. எங்கள் இலக்கு மைதானத்திலும் அதற்கு வெளியேயும் ஒவ்வொரு வீரரும் மற்றும் ஒவ்வொரு ரசிகரும் பெருமைப்படும் உடைத் தொகுப்புகளை உருவாக்குவதாகும்,’ என்று அவர் கூறினார். 

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் moose clothing ஆகியவை இணைந்து டிஜிட்டல் தளங்களில் அறிமுகப்படுத்திய புதிய ஜேர்சி தொகுப்புகள் தற்போது முன்னணி சில்லறை கடைகளிலும் ஆன்லைனிலும் ரசிகர்களுக்குப் பெற்றுக்கொள்ளலாம். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<