பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் இலங்கை கிரிக்கெட்!

119

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டமை மாத்திரமின்றி, பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணத்திலக்க அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

>> அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் குணதிலக்க இடைநீக்கம்!

இந்தநிலையில் தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டு மற்றும் அவுஸ்திரேலியா சென்றிருந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் மேலும் சில குற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளது.

குணதிலக்கவின் குற்றச்சாட்டை தவிர்த்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் இலங்கை கிரிக்கடெ் அணியின் வீரர் ஒருவர் பிரிஸ்பேனில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் வைத்து குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் வீரர் தொடர்பிலான எந்த ஒரு அறிவிப்பையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை.

>> ஆஸி.யின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது ; இறுதிவரை போராடி வென்ற இங்கிலாந்து!

இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ள விசாரணைக்குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க, சட்ட வழக்கறிஞர்களான நிரோஷன பெரேரா மற்றும் அசேல ரெகேவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்குறித்த மூவரும் தனுஷ்க குணதிலக்க மற்றும் அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி தங்கியிருக்கும் போது இடம்பெற்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<