“Rebuild Sri Lanka” திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் 300 மில்லியன் ரூபாய்   நன்கொடை!

1

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்திருக்கும் இலங்கை நாட்டினை மீளக் கட்டியெழுப்பும் அரசின் நிகழ்ச்சித் திட்டமான “Rebuild Sri Lanka” இற்கு 300 மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இந்திய T20I அணிக்கு திரும்பும் ஹர்திக் மற்றும் சுப்மன் கில்

அதன்படி இந்த நன்கொடைப் பணமானது இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரது வழிகாட்டுதலிற்கு அமைய வழங்கப்படவிருக்கின்றது.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கோடிக்கணக்கான இலங்கையர்களால் போற்றப்படும் விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விளையாட்டு அமைப்பாக, நன்கொடை வழங்கும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.

திட்வா புயலினால் (Cyclone Ditwah) இலங்கை தீவு முழுவதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணத்தை வழங்குவதிலும்,  பாதிக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அத்தியாவசிய பொதுச் சேவைகளை மீட்டெடுக்கவும் தாம் வழங்கவிருக்கும் உதவும் என இலங்கை கிரிக்கெட் சபையானது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<