அவுஸ்ரேலிய அணி வலுவான நிலையில்

228
Milinada Siriwaradana

5 வருடங்களுக்கு பின் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி  இலங்கையில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடர் ஆரம்பமாக முன் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை சபை பதினொரு பேர் அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  இன்று கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை சபை பதினொரு பேர் அணி முதலில் துடுப்பாட்டத்தை  தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சபை பதினொரு பேர் அணி தமது இனிங்சில்  சகல விக்கட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. இதில் அசேல குணரத்ன 58 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 53 ஓட்டங்களையும் சதுரங்க டி சில்வா 49 ஓட்டங்களையும் சகலதுறை வீரர் தசுன் ஷானக 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டீபன் ஓ’கீஃப் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெக்சன் பேர்ட், ஆகியோர் தலா 2 விக்கட் வீதமும் வீழ்த்தினர்.

பின் தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்று இருந்தது. அவுஸ்ரேலிய அணி சார்பாக ஷோன் மார்ஷ் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழக்க ஜோ பர்ன்ஸ் ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களோடு ஆடுகளத்தில் இருந்தார். இலங்கை அணியின் ஷெஹான் ஜயசூரிய வீழ்ந்த ஒரு விக்கட்டை வீழ்த்தி இருந்தார். போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நாளை தொடர உள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்