சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் இணைக்கப்பட்டிருந்த (T20I) தனன்ஜய டி சில்வா மீண்டும் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
>>அயர்லாந்தையும் வீழ்த்தி இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அபார வெற்றி<<
தனன்ஜய டி சில்வா கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். இவருடைய வருகையுடன் லஹிரு உதார அணியிலிருந்து வாய்ப்பை இழந்துள்ளார்.
அதேநேரம் சிறிய உபாதை ஒன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மிலான் ரத்நாயக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் விளையாடிய ஏனைய வீரர்கள் அணியில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (22) ஆரம்பமாகவுள்ளதுடன், 24 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, தனன்ஜய டி சில்வா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, ஜெப்ரி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மாலிங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















