பயிற்சிகளை இரத்து செய்தது இலங்கை அணி

ICC Cricket World Cup 2023

7035

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (04) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிகள் வளி மாசடைவு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 

உலகக்கிண்ணத் தொடருக்கான தங்களுடைய அடுத்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் திங்கட்கிழமை (06) இலங்கை அணி எதிர்கொள்கின்றது. 

உலகக் கிண்ணப் போட்டிக்கான பயிற்சிகளை இரத்து செய்த பங்களாதேஷ்

குறித்த இந்தப் போட்டிக்காக இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணிவரை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு இலங்கை அணி திட்டமிட்டிருந்தது. 

எனினும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு காரணமாக பயிற்சிகளை நடத்த முடியாதுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இதேவேளை வளி மாசடைவு காரணமாக பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் (03) மேற்கொள்ளவிருந்த பயிற்சிகளை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<