மகளிர் ஆசியக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Women’s T20I Asia Cup 2022

48
 

பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக்கிண்ண T20I தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் அணியின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அதபத்து செயற்படவுள்ளதுடன், முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹாஷினி பெரேரா, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா மற்றும் கவீஷா டில்ஹாரி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

அதேநேரம் அனுபவ சுழல் பந்துவீச்சு வீராங்கனை இனோகா ரணவீர அணியின் பந்துவீச்சை பலப்படுத்தவுள்ளதுடன், ஓசதி ரணசிங்க மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் ஆசியக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 16ம் திகதிவரை பங்களாதேஷின் சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இம்முறை ஆசியக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் T20I குழாம்

சமரி அதபத்து (தலைவர்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவி, கவீஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷா சஞ்சீவினி, கசுனி நுத்யங்கா, ஓசதி ரணசிங்க, மல்ஷா ஷெஹானி, மதுசிகா மெத்தானந்த, இனோகா ரணவீர, ரஷ்மி சில்வா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<