போட்டியை சமநிலையில் முடிக்கும் போராட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி

896
SL A vs Pak A 2nd Test Day 3

இலங்கை ‘ஏ’ இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு விளையாடிய 4 நாட்கள் கொண்ட 1ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தற்போது இலங்கைஅணி பாகிஸ்தான்அணியோடு 4 நாட்கள் கொண்ட 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.

இந்தப் போட்டி சனிக்கிழமை(10) வர்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கைஅணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ‘ஏ’ அணி 250/10 (69.5)

ரொஷேன் சில்வா – 57
உதார ஜயசுந்தர – 53
அஷான் பிரியன்ஜன் – 36
நிரோஷன் திக்வெல்ல – 35
மிர் ஹம்சா – 62/4
ஹசன் அலி – 70/3

பாகிஸ்தான் ‘ஏ’ 461/8d (117)

சவுத் ஷகீல் – 86
முஹமத் ஹசன் – 73
முஹமத் நவாஸ் – 52
ஹசன் அலி 50*
சதப் கான் – 48
தனஞ்ஜய டி சில்வா – 28/2
விஷ்வ பெர்னாண்டோ – 104/2
லஹிரு கமகே 115/2

211 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கைஅணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  இலங்கைஅணி சார்பாக தனஞ்ஜய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களோடு ஆடுகளத்தில் உள்ளார். போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளதோடு இலங்கை அணி 8 விக்கட்டுகள் கைவசம் இருக்க 128 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியை சமநிலையில் முடிப்பதற்கு இலங்கை அணி போராட வேண்டிய ஒரு நிலையில் உள்ளது.