அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடர் இலங்கை A அணியின் வசம்

700

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும், உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை A அணி 8 விக்கெட்டுகளால் அசத்தல் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

இந்த வெற்றியுடன் இலங்கை A அணி, ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரினை இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க 3-0 என கைப்பற்றியிருக்கின்றது.

மேஜர் லீக் சுப்பர் 8 சுற்றில் சதமடித்த கௌஷால், ஓசத, மஹேல மற்றும் தரங்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு……..

சுற்றுலா அயர்லாந்து A – இலங்கை A அணிகள் இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து A அணித்தலைவர் ஹர்ரி டெக்டர் முதலில் தனது தரப்பிற்காக துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார். இதன்படி, தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவிய அயர்லாந்து A அணி தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

அயர்லாந்து A அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. எனினும், மத்திய வரிசையில் ஆடிய அணித்தலைவர் ஹர்ரி டெக்டர் மற்றும் ஷேன் கேட்கேட் ஆகியோர் தமது அபார துடுப்பாட்டத்தின் மூலம் அணியினை பலப்படுத்தினர்.

இதில், ஹர்ரி டெக்டர் சதம் விளாசி 7 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றதுடன், ஷேன் கேட்கேட் அரைச்சதம் ஒன்றுடன் 93 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

Photos: Sri Lanka vs Australia 1st Test – Day 1

ThePapare.com | 24/01/2019 | Editing and re-using images without….

இவர்களது துடுப்பாட்ட உதவியோடு அயர்லாந்து A அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான 45 ஓட்டங்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.  

Photo Album :  Ireland A Team Tour to Sri Lanka 2018/19 | 3rd ODI

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 269 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய இலங்கை A அணி பதிலுக்கு துடுப்பாடியது.

இதன்படி துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை A அணிக்காக மினோத் பானுக்க மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோர் அதிரடியான முறையில் ஓட்டங்கள் பெற்று சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களினும் அதிரடியோடு இலங்கை A அணி போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 31.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 272 ஓட்டங்களுடன் அடைந்தது.

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நடுவராக இலங்கையின் தர்மசேன

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) கடந்த ஆண்டில் சிறப்பாக…..

இலங்கை A அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்த வீரர்களில் ஒருவரான மினோத் பானுக்க சதம் ஒன்றுடன் வெறும் 87 பந்துகளில் 16 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, அவிஷ்க பெர்னாந்து 67 பந்துகளில் 89 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான ஜேம்ஸ் கெமரூன் டோவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியின் வெற்றியோடு அயர்லாந்து A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்றிருக்கும் இலங்கை A அணி, அடுத்ததாக மீண்டும் இந்த உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் சனிக்கிழமை (24) மோதுகின்றது.

போட்டியின் சுருக்கம்

 

முடிவு – இலங்கை A அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<