Home Tamil நுவனிது, தினுஷவின் சதங்களுடன் முடிவடைந்த முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்

நுவனிது, தினுஷவின் சதங்களுடன் முடிவடைந்த முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்

Sri Lanka A tour of Australia 2025 

39
Sri Lanka A tour of Australia 2025

டார்வினில் நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிகள் இடையிலான  முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

>>மூன்றாவது T20I போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த தயாராகும் இலங்கை!<<

இலங்கை A கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரினை அடுத்து தற்போது இரு போட்டிகள் கொண்ட (நான்கு நாட்கள்) டெஸ்ட் தொடர் இடம்பெறுகின்றது. அதன்படி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் எதிரணியினால் துடுப்பாடப் பணிக்கப்பட்ட இலங்கை A அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையாது போயினும் மத்திய வரிசை வீரராக களமிறங்கிய சோனால் தினுஷ பொறுப்புடன் ஆடி சதம் பெற்றுக் கொடுத்தார். இதனால் இலங்கை A அணி முதல் இன்னிங்ஸில் 82 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 272 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.

இலங்கை A  அணியின் துடுப்பாட்டத்திற்காக தினுஷ 148 பந்துகளில் 10 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காது 105 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய A பந்துவீச்சில் லியம் ஸ்கொட், ஹென்ரி தோர்ன்டன் மற்றும் நதன் மெக்சீவினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

இதற்குப் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய A அணியானது முதல் இன்னிங்ஸில் இமாலய இலக்காக 161.4 ஓவர்களில் 486 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. அவுஸ்திரேலிய தரப்பில் நதன் மெக்சீவினி மற்றும் லியம் ஸ்கொட் ஆகியோர் தலா 94 ஓட்டங்களை தனிநபர் ஓட்டங்களாக தங்களது பெயர்களில் பதிவு செய்தனர்.

இலங்கை A பந்துவீச்சில் சொனால் தினுஷ 4 விக்கெட்டுக்களையும், ப்ரமோத் மதுசான் 3 விக்கெட்டுக்களையும், நிஷான் பீரிஸ் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் ஒரு விக்கெட்டினையும் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் எதிரணியினை விட 214 ஓட்டங்கள் பின்தங்கி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை A அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் ஆட்டம் சமநிலை அடையும் போது 280 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. இலங்கை A அணியின் சார்பில் இம்முறை சதம் விளாசிய நுவனிது பெர்னாண்டோ 104 ஓட்டங்கள் பெற்றிருக்க, அணித்தலைவர் பசிந்து சூரியபண்டார மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் தலா 56 ஓட்டங்கள் வீதம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

Australia A Team
486/10 (161.4)

Sri Lanka A Team
272/10 (82) & 280/3 (81)

Batsmen R B 4s 6s SR
Lahiru Udara c & b Thornton 5 33 0 0 15.15
Kamil Mishara c Josh Philippe b Liam Scott 12 29 1 0 41.38
Nuwanidu Fernando c Nathan McSweeney b Thornton 34 76 3 0 44.74
Pasindu Sooriyabandara c Zanden Jeh b Mitchell Perry 20 71 0 0 28.17
Pavan Rathnayake c Kurtis Patterson b Zanden Jeh 1 10 0 0 10.00
Sonal Dinusha not out 105 148 10 1 70.95
Vishad Randika c Josh Philippe b Louis Smith 27 30 4 1 90.00
Isitha Wijesundera c Jason Sangha b Nathan McSweeney 33 67 2 1 49.25
Pramod Madushan c Louis Smith b Nathan McSweeney 8 31 1 0 25.81
Mohamed Shiraz c Nathan McSweeney b Campbell Kellaway 1 6 0 0 16.67
Nishan Peiris c Jason Sangha b Liam Scott 1 10 0 0 10.00


Extras 25 (b 2 , lb 2 , nb 19, w 2, pen 0)
Total 272/10 (82 Overs, RR: 3.32)
Bowling O M R W Econ
Mitchell Perry 12 3 31 1 2.58
Liam Scott 14 3 27 2 1.93
Thornton 14 3 31 2 2.21
Louis Smith 8 2 31 1 3.88
Zanden Jeh 11 0 59 1 5.36
Nathan McSweeney 14 0 51 2 3.64
Campbell Kellaway 6 0 27 1 4.50
Jason Sangha 3 1 11 0 3.67
Batsmen R B 4s 6s SR
Campbell Kellaway c Kamil Mishara b Pramod Madushan 13 40 2 0 32.50
Jake Weatherald c Kamil Mishara b Mohamed Shiraz 54 98 6 1 55.10
Nathan McSweeney b Pramod Madushan 94 220 6 0 42.73
Kurtis Patterson lbw b Sonal Dinusha 19 47 1 0 40.43
Jason Sangha c Pasindu Sooriyabandara b Sonal Dinusha 0 3 0 0 0.00
Liam Scott c Kamil Mishara b Sonal Dinusha 94 221 6 0 42.53
Josh Philippe lbw b Nishan Peiris 85 107 6 1 79.44
Mitchell Perry c Pramod Madushan b Sonal Dinusha 61 135 5 1 45.19
Zanden Jeh c Sonal Dinusha b Nishan Peiris 27 55 3 0 49.09
Thornton not out 9 25 0 0 36.00
Louis Smith b Pramod Madushan 15 21 2 0 71.43


Extras 15 (b 8 , lb 5 , nb 2, w 0, pen 0)
Total 486/10 (161.4 Overs, RR: 3.01)
Bowling O M R W Econ
Mohamed Shiraz 22 6 51 1 2.32
Isitha Wijesundera 19 3 51 0 2.68
Nishan Peiris 47 7 137 2 2.91
Pramod Madushan 23.4 1 82 3 3.50
Sonal Dinusha 33 3 97 4 2.94
Nuwanidu Fernando 15 1 42 0 2.80
Kamil Mishara 2 0 13 0 6.50


Batsmen R B 4s 6s SR
Lahiru Udara c Josh Philippe b Thornton 17 15 2 0 113.33
Kamil Mishara c Nathan McSweeney b Mitchell Perry 35 66 5 0 53.03
Nuwanidu Fernando not out 104 218 7 3 47.71
Pasindu Sooriyabandara c Nathan McSweeney b Mitchell Perry 56 98 4 1 57.14
Pavan Rathnayake not out 56 96 6 0 58.33


Extras 12 (b 3 , lb 2 , nb 7, w 0, pen 0)
Total 280/3 (81 Overs, RR: 3.46)
Bowling O M R W Econ
Mitchell Perry 11 1 36 2 3.27
Thornton 13 4 38 1 2.92
Liam Scott 9 4 10 0 1.11
Zanden Jeh 21 1 96 0 4.57
Nathan McSweeney 12 2 48 0 4.00
Louis Smith 2 0 6 0 3.00
Campbell Kellaway 13 1 41 0 3.15