அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை A கிரிக்கெட் குழாம்கள் அறிவிப்பு

4
Mohamed-Shiraz-Bowling

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் விளையாடும் இலங்கை A குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

>>நடுவரை விமர்சித்த மே.தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு அபராதம்<<

இன்று (30) மாலை அவுஸ்திரேலியா பயணமாகும் இந்த இலங்கை A குழாம்களில் ஒருநாள் அணியின் தலைவராக அண்மையில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற லஹிரு உதார நியமனம் செய்யப்பட்டிருக்க, நான்கு நாட்கள் அணியின் தலைவராக பசிந்து சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார் 

அதேவேளை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் உள்வாங்கப்படாத வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ், இளம் சகலதுறைவீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகிய இருவரும் அவுஸ்திரேலிய A அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் 

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை A அணியானது ஜூலை 04ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடரில் முதலாவதாக பங்கேற்கவிருப்பதோடு, அதன் பின்னர் ஜூலை 13ஆம் திகதி நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் விளையாடுகின்றது 

இலங்கை A (ஒருநாள் குழாம்)

கமில் மிஷார, லஹிரு உதார (தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, பசிந்து சூரியபண்டார, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, ஷொனால் தினுஷ, சமிந்து விக்ரமசிங்க, சிரான் பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர, ப்ரமோத் மதுசான், மொஹமட் சிராஸ், துஷான் ஹேமன்த, வனுஜ சஹான் 

இலங்கை A (நான்கு நாட்கள் குழாம்)

கமில் மிஷார, லஹிரு உதார, ரவிந்து ரசன்த, பசிந்து சூரியபண்டார (தலைவர்), நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, விசாட் ரன்திக்க, ஷொனால் தினுஷ, சோஹான் டி லிவேரா, சிரான் பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர, அசங்க மனோஜ், ப்ரமோத் மதுசான், மொஹமட் சிராஸ், வனுஜ சஹான், நிஷான் பீரிஸ் 

போட்டி அட்டவணை

  • மைதானம்: டார்வின் 

ஒருநாள் போட்டிகள்

  • ஜூலை 04, 06 மற்றும் 09

நான்கு நாள் போட்டிகள்

  • ஜூலை 13-16
  • ஜூலை 20-23

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<