Home Tamil பொதுநலவாய விளையாட்டு விழாவினை மோசமாக நிறைவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

பொதுநலவாய விளையாட்டு விழாவினை மோசமாக நிறைவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

722

பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் T20 கிரிக்கெட் தொடரில், இன்று (04) தமது இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவை எதிர்கொண்டு 10 விக்கெட்டுக்களால் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் ஏலத்தில் ஐந்து இலங்கை வீரர்கள்

இந்த தொடரில் குழு B இல் காணப்படும் இலங்கை அணி ஏற்கனவே தாம் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் விளையாடிய போட்டிகளில் தோல்வியடைந்து ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இன்று (04) தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது.

தொடர்ந்து பேர்மிங்கமில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க வீராங்கனைகளின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 17.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 46 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துக் கொண்டது. இது இலங்கை மகளிர் அணி T20 போட்டிகளில் பெற்ற அதிகுறைவான ஓட்டங்களாகவும் பதிவானது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து 15 ஓட்டங்களை எடுத்ததோடு, அவர் மாத்திரமே அணியில் ஈரிலக்க ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாகவும் மாறினார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தோல்வி

மறுமுனையில் தென்னாபிரிக்க பந்துவீச்சில் நடைன் டி கிளர்க் வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மசாபடா கிளாஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 47 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, வெறும் 6.1 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்களுடன் அடைந்தது.

தென்னாபிரிக்க மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் டஸ்மின் பிரிட்ஸ் 21 ஓட்டங்களையும் அன்னகே போஸ்ச் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்தனர்.

இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை மகளிர் அணி தொடரில் மூன்று தொடர் தோல்விகளை பதிவு செய்ய, தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு இது தொடரில் முதல் வெற்றியாக மாறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


South Africa Women
49/0 (6.1)

Sri Lanka Women
46/10 (17.1)

Batsmen R B 4s 6s SR
Hasini Perera c Sinalo Jafta b Shabnim Ismail 0 1 0 0 0.00
Chamari Athapaththu c & b Masabata Klaas 15 29 2 0 51.72
Harshitha Samarawickrama c Sinalo Jafta b Masabata Klaas 1 3 0 0 33.33
Anushka Sanjeewani c Mignon du Preez b Nadine de Klerk 3 9 0 0 33.33
Nilakshi de Silva c & b Nadine de Klerk 0 5 0 0 0.00
Kavisha Dilhari b Nadine de Klerk 4 5 1 0 80.00
Ama Kanchana run out (Laura Wolvaardt) 4 10 0 0 40.00
Malsha Shehani c Laura Wolvaardt b Nonkululeko Mlaba 9 18 2 0 50.00
Oshadi Ranasinghe run out (Sinalo Jafta) 5 14 0 0 35.71
Sugandika Kumari c & b Chloe Tryon 0 5 0 0 0.00
Inoka Ranaweera not out 0 4 0 0 0.00


Extras 5 (b 2 , lb 1 , nb 0, w 2, pen 0)
Total 46/10 (17.1 Overs, RR: 2.68)
Bowling O M R W Econ
Shabnim Ismail 4 0 12 1 3.00
Masabata Klaas 3 0 7 2 2.33
Nadine de Klerk 4 1 7 3 1.75
Anneke Bosch 2 0 12 0 6.00
Nonkululeko Mlaba 3.1 1 4 1 1.29
Chloe Tryon 1 0 1 1 1.00


Batsmen R B 4s 6s SR
Anneke Bosch not out 20 16 2 0 125.00
Tazmin Brits not out 21 21 3 0 100.00


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 49/0 (6.1 Overs, RR: 7.95)
Bowling O M R W Econ
Sugandika Kumari 1 0 9 0 9.00
Ama Kanchana 1 0 8 0 8.00
Oshadi Ranasinghe 2 0 15 0 7.50
Inoka Ranaweera 2 0 13 0 6.50
Malsha Shehani 0.1 0 4 0 40.00



முடிவு – தென்னாபிரிக்க மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<