Home Tamil துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கைக்கு முதல் T20யில் தோல்வி

துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கைக்கு முதல் T20யில் தோல்வி

161

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

அதோடு இப்போட்டியின் வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், தென்னாபிரிக்கா 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இந்திய – இங்கிலாந்து 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கை வீரர்களுடனான ஒருநாள் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது. அந்தவகையில், இந்த T20 தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் கேசவ் மஹராஜ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய ஆகியோர் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்க, மகிஷ் தீக்ஷனவும் T20 போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார். மறுமுனையில் தென்னாபிரிக்க அணி தமது நட்சத்திர வீரர்களான டேவிட் மில்லர் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது. 

இலங்கை அணி 

தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால் (விக்கெட் காப்பாளர்), பானுக்க ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, அகில தனன்ஞய

தென்னாபிரிக்க அணி 

எய்டன் மர்க்ரம், குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ட்வைன் ப்ரைடொரியஸ், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிலாசன் (விக்கெட் காப்பாளர்), என்ட்ரிச் நோர்கியா, கேஷவ் மஹராஜ், காகிஸோ ரபாடா, ஜொர்ன் போர்டியுன், டப்ரைஷ் சம்ஷி

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை குவித்தனர். 

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற, ரீசா ஹென்ரிக்ஸ் 30 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

ICC T20 உலகக் கிண்ண ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு; ரஷீட் ராஜினாமா

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற, துஷ்மன்த சமீர, தசுன் ஷானக்க மற்றும் மகிஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.   

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் தன்னுடைய 6ஆவது T20 அரைச்சதத்துடன் 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், சாமிக்க கருணாரட்ன 2 சிக்ஸர்களை விளாசி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொர்ன் பொர்டியுன், என்ட்ரிச் நோர்க்கியா, கேசவ் மஹராஜ், தப்ரைஸ் சம்ஷி மற்றும் ட்வைன் பிரேடோரியஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் தனது சிறந்த துடுப்பாட்டத்திற்காக தெரிவாகினார். 

இனி, தென்னாபிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
135/6 (20)

South Africa
163/5 (20)

Batsmen R B 4s 6s SR
Quinton de Kock c Charith Asalanka b Wanindu Hasaranga 36 32 3 1 112.50
Reeza Hendricks c Maheesh Theekshana b Wanindu Hasaranga 38 30 3 1 126.67
Aiden Markram c Dushmantha Chameera b Dasun Shanaka 48 33 1 2 145.45
Heinrich Klaasen lbw b Maheesh Theekshana 2 4 0 0 50.00
David Miller c Avishka Fernando b Dushmantha Chameera 26 15 2 1 173.33
Dwaine Pretorius not out 10 6 1 0 166.67
Kagiso Rabada not out 0 0 0 0 0.00


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 163/5 (20 Overs, RR: 8.15)
Fall of Wickets 1-73 (9.5) Quinton de Kock, 2-79 (11.1) Reeza Hendricks, 3-87 (12.6) Heinrich Klaasen, 4-152 (18.5) Aiden Markram,

Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 0 35 1 8.75
Dhananjaya de Silva 2 0 12 0 6.00
Maheesh Theekshana 4 0 35 1 8.75
Akila Dananjaya 3 0 28 0 9.33
Wanindu Hasaranga 4 0 22 2 5.50
Chamika Karunaratne 2 0 24 0 12.00
Dasun Shanaka 1 0 6 1 6.00


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando run out (Anrich Nortje) 11 14 0 0 78.57
Dinesh Chandimal not out 66 54 5 2 122.22
Bhanuka Rajapaksa lbw b Keshav Maharaj 0 1 0 0 0.00
Charith Asalanka c Dwaine Pretorius b Tabraiz Shamsi 6 19 0 0 31.58
Dasun Shanaka b Bjorn Fortuin 16 14 1 0 114.29
Wanindu Hasaranga c Reeza Hendricks b Dwaine Pretorius 0 2 0 0 0.00
Dhananjaya de Silva b Anrich Nortje 1 2 0 0 50.00
Chamika Karunaratne not out 22 14 1 2 157.14


Extras 13 (b 0 , lb 1 , nb 0, w 12, pen 0)
Total 135/6 (20 Overs, RR: 6.75)
Fall of Wickets 1-34 (5.5) Avishka Fernando, 2-34 (6.1) Bhanuka Rajapaksa, 3-68 (11.1) Charith Asalanka, 4-95 (14.6) Dasun Shanaka, 5-102 (15.5) Wanindu Hasaranga, 6-104 (16.1) Dhananjaya de Silva,

Bowling O M R W Econ
Bjorn Fortuin 4 0 24 1 6.00
Anrich Nortje 4 0 29 1 7.25
Kagiso Rabada 3 0 21 0 7.00
Keshav Maharaj 4 0 19 1 4.75
Tabraiz Shamsi 2 0 20 1 10.00
Dwaine Pretorius 3 0 21 1 7.00



முடிவு – தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க