இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர் ஆகியவற்றுக்;கு தயாராகும் நோக்கில் மூன்று அணிகளைக் கொண்ட முத்தரப்பு உள்ளூர் T20 லீக் தொடர் ஒன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாதம் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து,உள்ளூர் கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப் புதிய தொடரை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல,ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் வரை இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இல்லாததால், இக்காலப்பகுதியில் இலங்கை அணிக்கு அதிசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யும் முகமாக இந்த தொடர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள 3 அணிகளும் நீலம், பச்சை மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.
- லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
- பவன் ரத்நாயக்கவின் அசத்தல் சதத்துடன் சம்பியனாகிய கொழும்பு கிரிக்கெட் கழகம்
- மேஜர் கழக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த வாரம்
அத்துடன், ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும். அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, SSC மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 3 அணிகளிலும் இலங்கை தேசிய அணி வீரர்கள், இலங்கை ஏ அணி வீரர்கள் மற்றும் கழக மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
ஆக. 7 – ப்ளூஸ் எதிர் கிரீன்ஸ்
ஆக. 8 – கிரேஸ் எதிர் ப்ளூஸ்
ஆக. 10 – கிரேஸ் எதிர் கிரீன்ஸ்
ஆக. 11 – கிரீன்ஸ் எதிர் ப்ளூஸ்
ஆக. 13 – ப்ளூஸ் எதிர் கிரேஸ்
ஆக. 14 – கிரீன்ஸ் எதிர் கிரேஸ்
ஆக. 16 – இறுதிப்போட்டி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















