இலங்கை கிரிக்கெட் இந்தியாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Sri Lanka tour of India 2022

7191

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும்  T20i   தொடர்களுக்கான போட்டி அட்டவணையில் மாற்றமொன்றை ஏற்படுத்துமாறு  இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் என்பன எதிர்வரும் மாதம்  25ஆம் திகதி முதல் மார்ச் 18ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்தநிலையில், இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்த மாதம் (பெப்ரவரி) 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளது. எனவே, அவுஸ்திரேலிய  உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் முதலில் T20i போட்டிகளில் விளையாட முடியும் என இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.

குறிப்பாக, இலங்கை டெஸ்ட் அணியின் குழாத்தில் உள்ள அதிகமான வீரர்கள் T20i குழாத்தில் இடம்பெறமாட்டார்கள். எனவே, T20i போட்டிகள் முதலில் நடைபெறுமானால், இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாடுகளுக்கு இலகுவாக இருக்கும் என்பதால், T20i போட்டிகளை முதலில் நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டின்படி, டெஸ்ட் போட்டிகள் பெங்களூர்  மற்றும் மொஹாலியில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் லக்னோவ் மற்றும் தர்மசாலாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை (ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணை)

  • பெப்ரவரி 25 முதல் மார்ச் 1 – முதல் டெஸ்ட்
  • மார்ச் 5 முதல் 9 – இரண்டாவது டெஸ்ட்
  • மார்ச் 13 – முதல் T20i
  • மார்ச் 15 – இரண்டாவது T20i
  • மார்ச் 18 – மூன்றாவது T20i

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<