மகளிர் உலகக் கிண்ணம் எப்போது? நேரடியாக தகுதிபெறுமா இலங்கை?

121
ICC

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஆடவர் T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

2011 உலகக் கிண்ண தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்

அடுத்த இரண்டு வாரங்களில் மகளிர் உலகக் கிண்ணம் தொடர்பான முடிவு எடுக்கப்படும். ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இருந்தால், அதனை இன்னும் சில தினங்களில் தெரிந்துக்கொள்ள முடியும். தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டால், முதற்தர உலகக் கிண்ண தொடர் ஒன்றை நடுத்துவதற்கான வளங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த ஆண்டு ஒக்டோபரில் 15 அணிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வது பொருத்தமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்காது என சிந்தித்த ஐசிசி, மகளிர் கிரிக்கெட்டுக்கும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஒரு முடிவை ஆராய்ந்து எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொவிட்-19 வைரஸ் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் போதும், அதன் சமூக பரவலை கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் நியூசிலாந்தும் இடம்பிடித்துள்ளது. அத்துடன், ரசிகர்களை மைதானத்துக்கு அழைக்கும் வாய்ப்பும் நியூசிலாந்துக்கு  உள்ளது. ஈடன், பே ஓவல், தி பேசின், ஹக்லி ஓவல் மற்றும் பல்கலைக்கழக ஓவல் ஆகிய 5 மைதானங்களில் ரசிகர்களுடன் போட்டிகளை நடத்துவதற்கு நியூசிலாந்துக்கு முடியும்.

மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கு ஐந்து அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் உள்ளன. மீதமுள்ள அணிகளை தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த போதும், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலைத் தணிப்பதற்கான ஒரு வழி, மகளிர் ஒருநாள் சம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையின் படி, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை நேரடியாக இணைக்க முடியும். இது ஒரு சிக்கலைத் தீர்க்கும் என்றாலும், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து போன்ற தகுதிவாய்ந்த மற்ற அணிகள் இதனால் பாதிக்கக்கூடும். 

இறுதி முடிவை எடுக்கும் தகுதியுடையவர்கள் மகளிர் உலகக் கிண்ணத்தை ஒத்திவைக்க முடிவுசெய்தாலும், 2022ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ணம் பாதிக்கக்கூடும் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க