பதுரெலிய அணியை வீழ்த்திய NCC அணிக்கு சுப்பர் 8 வாய்ப்பு

121

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டு உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் ஐந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இந்த போட்டிகளுடன் பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் NCC  

பதுரெலிய விளையாட்டுக கழகத்தை 10 விக்கெட்டுகளால் வென்ற NCC அணி பிரீமியர் லீக் B குழுவில் இருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பை பெற்றுள்ளது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை இரண்டாவது இன்னிங்ஸில் 160 ஓட்டங்களுக்கு சுருட்டியதால் 42 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை NCC அணி விக்கெட் இழப்பின்றியே எட்டியது.

இதன்படி பதுரெலிய விளையாட்டுக் கழகம் B குழுவில் முதல் 4 இடங்களுக்குள் முன்னேறத் தவறிய நிலையில் சுப்பர் 8 சுற்று போட்டிக்கான தகுதியை இழந்தது. அந்த அணி பிளேட் கேடயத்திற்கான போட்டியில் ஆடவுள்ளது. இதனிடையே NCC அணியின் முன்னேற்றத்தை அடுத்து தமிழ் யூனியன் அணியும் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கும் நெருக்கடியில் உள்ளது.

18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு

இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய NCC அணியின் லசித் அம்புல்தெனிய மொத்தம் 40 விக்கெட்டுகளை பெற்று தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 194 (72.4) – சஞ்ஜய சதுரங்க 28, அலங்கார அசங்க 25, சதுரங்க டி சில்வா 3/28, லசித் எம்புல்தெனிய 3/33, லஹிரு குமார 2/45

​NCC (முதல் இன்னிங்ஸ்) – 313 (89.1) – அஞ்செலோ பெரேரா 89, மாலிங்க அமரசிங்க 45, பர்வீஸ் மஹ்ரூப் 37, மஹேல உடவத்த 33, அலங்கார அசங்க 3/43, நிமந்த சுபசிங்க 3/59, திலேஷ் குணரத்ன 2/95

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 160 (54.4) – சுப்ரமணியன் ஆனந்த் 62, ஷிரான் ரத்னாயக்க 21, சதுரங்க டி சில்வா 4/44, லிசித் எம்புல்தெனிய 3/46

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 45/0 (4.4) – லஹிரு உதார 39*

முடிவு – NCC அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி


SSC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

SSC அணி நிர்ணயித்த 603 என்ற நெருங்க முடியாத வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடிய சோனகர் விளையாட்டுக் கழகம் விக்கெட்டுகளை காத்துக் கொண்டு போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த SSC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 563 ஓட்டங்களை பெற்றது. இதன்போது SSC அணி முன்கூட்டியே ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு சோனகர் விளையாட்டு கழகத்திற்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு இருந்தபோதும் அந்த அணி இரண்டாவது இன்னிங்சை முழுமையாக ஆடியது.

இந்நிலையில் சோனகர் விளையாட்டுக் கழகம் 68 ஓட்டங்களை பெற்ற நிலையில் மேலும் ஒரு ஓட்டத்தை பெறுவதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் அந்த அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

நடப்பு சம்பியனான SSC அணி A குழுவில் இருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருப்பதோடு அந்த குழுவில் கடைசி இடத்தை பெற்ற சோனகர் விளையாட்டுக் கழகம் பிளேட் கேடயத்திற்கு ஆடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 199 (52.1) – தசுன் ஷானக்க 75, மினோத் பானுக்க 36, தரிந்து ரத்னாயக்க 5/71, ஷிரான் பெர்னாண்டோ 3/56

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 160 (48) – சாமர சில்வா 32, டிலங்க சந்தகன் 31, அதீஷ திலஞ்சன 30, பிரிமோஷ் பெரேரா 27, ஜெப்ரி வென்டர்சே 3/30, சச்சித்ர சேனநாயக்க 4/40, விமுக்தி பெரேரா 2/40

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 563 (112.1) – கௌஷால் சில்வா 142, திமுத் கருணாரத்ன 128, சம்மு அஷான் 79, மினோத் பானுக்க 75, மிலிந்த சிறிவர்தன 52, டில்ஹான் ஜயலத் 27, சசித்ர சேனநாயக்க 23, தரிந்து ரத்னாயக்க 4/184, டிலங்க சந்தகன் 4/199, சஹான் விஜேரத்ன 2/97  

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164/5 (41) – பபசர வாதுகே 64, ஷானுக்க துலாஜ் 52*, இரோஷ் சமரசூரிய 37, சசித்ர சேனநாயக்க 2/27

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் அதிக ஓட்டங்கள் குவித்ததால் கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகங்ளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

திமுத் கருணாரத்ன – கௌஷால் ஜேடியினால் மற்றொரு இரட்டைச்சத இணைப்பாட்டம்

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 496 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது சகல விக்கெட்டுகளையும் இழந்து 372 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் அஷான் பிரியஞ்சன் 101 ஓட்டங்களை பெற்றார்.

பிரீமியர் லீக் A குழுவில் இருந்து கொழும்பு கிரிக்கெட் கழகம் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 496 (127.2) – ஹர்ஷ குரே 140, மின்ஹாஜ் ஜலீல் 82, தனுக்க தாபரே 72, சாலிய சமன் 69, நவிந்து விதானகே 34, பிரமோத் மதுவந்த 29, சசித் பதிரண 4/95, அஷான் பிரியஞ்சன் 2/63

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (128.3) – அஷான் பிரியஞ்சன் 101, கவீன் பண்டார 92, மாதவ வர்ணபுர 48, சச்சித் பதிரண 50, லஹிரு கமகே 31, மலிந்து மதுரங்க 21, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/100, சாலிய சமன் 3/67

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


BRC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

லக்ஷித மதுஷான் பெற்ற அபார சதத்தின் மூலம் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் BRC அணியுடனான போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்தது.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இராணுவப்படை அணி கடைசி நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 9 விக்கெட்டுகளை இழந்து 454 ஓட்டங்களை பெற்றது.

மத்திய வரிசையில் வந்த லக்ஷித மதுஷான் 151 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது கடைசி வரை களத்தில் இருந்தார். எவ்வாறாயினும் பிரீமியர் லீக் தொடரில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை. BRC அணி அந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232 (65.3) – டில்ஷான் டி சொய்சா 50, சீகுகே பிரசன்ன 45, திலகரத்ன சம்பத் 4/40, சாமிகர எதிரிசிங்க 3/70, சுராஜ் ரந்திவ் 2/39

BRC (முதல் இன்னிங்ஸ்) – 345 (84.4) – ருமேஷ் புத்திக 114, லிசுல லக்ஷான் 80, லசித் லக்ஷான் 65, துஷான் விமுக்தி 5/65, டில்ஷான் டி சொய்சா 2/26, சீகுகே பிரசன்ன 2/95

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 454/9 (115) – லக்ஷித மதுஷான் 151*, டில்ஷான் டி சொய்சா 56, அஷான் ரந்திக்க 52, துஷான் விமுக்தி 47, கசுன் டி சில்வா 46, ஹிமேஷ லியனகே 36, யசோத மெண்டிஸ் 26, சாமிகர எதிரிசிங்க 3/91, ஹிமேஷ் ரமனாயக்க 3/56, சுராஜ் ரந்திவ் 2/162  

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

மத்திய வரிசை விரர் ரொஷேன் சில்வா சதம் பெற ப்ளூம்பீல்ட் அணியுடனான போட்டியை ராகம கிரிக்கெட் கழகம் சமநிலையில் முடித்துக் கொண்டது.

ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்

கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ராகம கிரிக்கெட் கழகம் அந்த நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடியது. இதில் லஹிரு மிலந்த தனது சதத்தை 8 ஓட்டங்களால் தவறவிட்டபோதும் ரொஷேன் சில்வா கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றார்.

ப்ளூம்பீல்ட் அணியின் ஒன்பது வீரர்கள் பந்துவீசினாலும் அந்த அணியால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனது. இதன்படி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது ராகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320 (90) – லஹிரு திரிமான்ன 62, ரொஷேன் சில்வா 59, சமீர டி சொய்சா 53, ஜனித் லியனகே 50, லஹிரு மலின்த 38, கசுன் ராஜித 4/81, லஹிரு சமரகோன் 2/51, ரமேஷ் மெண்டிஸ் 2/89, மலித் டி சில்வா 2/86

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 273 (63.5) – லஹிரு சமரகோன் 53*, மலித் டி சில்வா 52, பிரமுத் ஹெட்டிவத்த 48, நிபுன் கருனநாயக்க 46, ரமேஷ் மெண்டிஸ் 35, நிஷான் பீரிஸ் 4/97, இஷான் ஜயரத்ன 3/63, அமில அபொன்சோ 3/75

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 327/7 (109) – ரொஷேன் சில்வா 106*, லஹிரு மலிந்த 92, ஜனித் லியனகே 31, மலித் டி சில்வா 3/74, ரமேஷ் மெண்டிஸ் 2/65

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.