இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் A மட்ட கழக அணியான காலி கிரிக்கெட் கழக அணியுடனான போட்டியில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது இளம் இடது கை சுழல்பந்து வீச்சாளர் மலித் டி சில்வாவின் பந்து வீச்சுடன் புளும் பீல்ட் கழக அணி வலுப்பெற்றுள்ளது.
இந்தப் போட்டி புளும் பீல்ட் மைதானத்தில் நேறறு ஆரம்பமாகியது. 9 விக்கெட்டு
இதனையடுத்து, இன்று தமது முதல் இன்னிங்சினை தொ
பின்னர், காலி கிரிக்கெட் கழகம் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்து, புளும் பீல்ட் கிரிக்கெட் கழக சுழல் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், 54.2 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த போதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமித்த ஹூனுக்கும்பர நிதானமாக ஆடி 54 ஓட்டங்களினை பெற்றிருந்தார். இடது கை சுழல் பந்து வீசசாளர் மலித் டி சில்வா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர், இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த புளும் பீல்ட் கழக அணியினர், 34 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இதன்போது களத்தில் நின்றிருந்த புளும் பீல்ட் அணியின் தலைவர் நிப்புன் கருணநாயக்க 38 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.
புளும் பீல்ட் கழகத்தில் இன்று பறிபோன நான்கு விக்கெட்டுகளில், சஞ்சீவ வீரக்கோன், சலன டி சில்வா ஆகியோர் தலா இரண்டாக கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 276 (100.3) – அதீச நாணயக்கார 78, லஹிரு ஜயக்கொடி 48, வினோத் பெரேரா 46, ரோஷன் ஜயதிஸ்ஸ 64/4, சஜீவ வீரக்கோன் 85/3
காலி கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 185 (54.2) – தமித்த குணுகும்பர 54, சலன டி சில்வா 32, மலித் டி சில்வா 60/5, லஹிரு பெர்னாந்து 52/3
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 115/4 (34) – நிப்புன் கருணநாயக்க 38*, சலன டி சில்வா 34/2
போட்டியின் இறுதி மற்றும் மூன்றாவது நாள் நாளை தொடரும்




















