கிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம் சங்கக்காரவினால் திறந்துவைப்பு

55
SLC

இலங்கை கிரிக்கெட்டின் பிரதான மத்திய நிலையமாக விளங்குகின்ற கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் வீரர்களுக்காக நிர்மானிக்கப்பட்ட புதிய தங்குமிட கட்டடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தற்போதைய தலைவருமான குமார் சங்கக்காரவினால் திறந்து வைக்கப்பட்டது. 

பிரேமதாஸ மைதானத்தின் பிரதான விளையாட்டு மையத்தின் மேல் மாடியில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடடத்தில் ஒரே நேரத்தில் 44 வீரர்கள் தங்குவதற்கான வசதிகள் இருப்பதுடன், பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் தங்குவதற்கும் பிரத்தியேகமாக அறைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன

அத்துடன், தேசிய அணி, இலங்கை அணி, வளர்ந்துவரும் அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்கள் கொழும்புக்கு வந்து பயிற்சிகளில் ஈடுபடும் நாட்களில் இந்த தங்குமிடத்தைப் பயன்படுத்த முடியும்

  • SLC
  • SLC
  • SLC
  • SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவின் விசேட அழைப்பின் பேரில் இந்தக் கட்டட திறப்பு விழாவில் குமார் சங்கக்கார பங்குபற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்

அத்துடன், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய குமார் சங்கக்கார,நீண்ட காலமாக இவ்வாறானதொரு தங்குமிட வசதிகளைக் கொண்ட கட்டடமின்றி எமது வீரர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்

விசேடமாக பயிற்சிகளில் கலந்துகொண்ட பிறகு வீரர்கள் மிகவும் கலைப்புடன் வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற வீரர்கள் வீடுகளுக்குச் செல்ல சிரமப்படுவது வழக்கம்

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம்…….

என்னைப் பொறுத்தமட்டில் வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது நிர்வாகத்தினரின் பொறுப்பாகும். அவ்வாறு செய்தால் தான் அவர்களிடம் இருந்து சிறந்த பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும்

அதேபோல, இதே மைதானத்தில் இன்னுமொரு உள்ளக கிரிக்கெட் அரங்கும், நீச்சல் தடாகமும் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. எனவே, விரைவில் அதன் நிர்மானப் பணிகளையும் பூர்த்தி செய்து கொடுத்தால் எமது வீரர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது

எனவே அவர்களுக்குத் தேவையாக இருந்த தங்குமிட வசதிகளை பூர்த்தி செய்து கொடுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

இதுஇவ்வாறிருக்க, இதுபோன்ற மேலும் ஒரு கட்டடத்தை கண்டி, பல்லேகலை மைதானத்தில் நிர்மானிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<