லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது பருவகால போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெறும் என உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
LPL தொடரின் ஆறாவது பருவகாலப்போட்டிகள் இம்மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
>>வெள்ளப்பெருக்கு நிவாரணப் பணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை உதவிக்கரம்<<
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே T20 உலகக்கிண்ணத்துக்கான மைதான தயார்படுத்தல்களை மேற்கொள்வதன் காரணமாக LPL தொடரானது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இலங்கையின் முதற்தர உள்ளூர் தொடரான LPL தொடர் கடந்த பருவகாலங்களை போன்று மீண்டும் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















