ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை விற்பனை செய்யப்படவுள்ள டிக்கெட்டுகள்

ICC Men’s T20 World Cup 2026

13
ICC Men’s T20 World Cup 2026

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான டிக்கெட் விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

>>2026 T20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்: குறைந்தபட்ச விலை 100 ரூபா!<<

இந்த தொடருக்கான டிக்கெட் விலைகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் போட்டி நடைபெறவுள்ள கொழும்பு ஆர்.பிரேமதாஸ, எஸ்.எஸ்.சி மற்றும் கண்டி – பல்லேகலை மைதானங்களின் டிக்கெட் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விலை 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விலை 1000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளதுடன், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிக்காக 2500 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

அத்துடன் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளன.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம்

அரங்கு விலை
SSC Pavilion Upstairs – Left Enclosure (A/C) 10000
SSC Pavilion Downstairs 5000
SSC Members Enclosure 5000
SLC Grand Stand – Top Level 7500
Col. F. C. De Saram Stand – Top Level (A/C) 10000
Col. F. C. De Saram Stand – Upper Level 1 7500
Col. F. C. De Saram Lower Stand 5000
Browns Pavilion 5000
SLC Special Marquee 5000
SLC Enclosure 1 – Top Level 7500
SLC Enclosure – Lower 5000
Tokyo Cement Tent 4000
Standing – Western Hill 1000
Standing – Eastern Hill 1000

 கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம்

அரங்கு சாதாரண விலை இந்தியா – பாகிஸ்தான்
Grand Stand – Top Level 7500 25000
Block A – Upper Level 5000 15000
Block A – Lower Level 3000 10000
Block B – Upper Level 5000 15000
Block B – Lower Level 3000 10000
Block C – Upper Level 5000 10000
Block C – Lower Level 1000 2500
Block D – Upper Level 5000 10000
Block D – Lower Level 1000 2500
Block A – Upper Level Corporate Box (16 seats) 200000 320000
Sight Screen North – Level 4 Corporate Box (per seat) 25000 50000

 கண்டி – பல்லேகலை மைதானம்

பிரிவு விலை
East Grass Embankment (Scoreboard End) 1000
West Grass Embankment 1000
A Lower 4000
B Lower 4000
Grand Stand – Top Level A 5000
Grand Stand Level 2 – Corporate Box F (per seat) 15000

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<