மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் T20 குழாம் அறிவிப்பு

54
SL Women T20I squad
West Indies Womens tour of Sri Lanka 2024 | 3rd ODI

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>ILT20 புதிய தொடரில் எட்டு இலங்கை வீரர்கள்<<

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியானது ஒருநாள் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது.

இந்த T20 தொடருக்காக சாமரி அத்தபத்து தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை மகளிர் குழாத்தில் ஒருநாள் தொடரினை 3-0 எனக் கைப்பற்றிய உதவிய வீராங்கனைகள் அதிகமாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேநேரம் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் உதேசிகா ப்ரோபாதினி, சுழல் மங்கை இனோக்கா ரணவீர ஆகியோருக்கு இலங்கை T20 குழாத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களோடு இலங்கை மகளிர் அணியினை மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் பிரதிநிதித்துவம் செய்த வீராங்கனைகளான அனுஷ்கா சஞ்சீவனி, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரட்ன ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

>>மே.தீவுகளை வைட்வொஷ் செய்து இலங்கை மகளிர் அணி சாதனை<<

இவர்கள் ஒரு பக்கமிருக்க மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் 5 விக்கெட்டுக்கள் பெறுதியினை கைப்பற்றிய 22 வயது சுழல்பந்துவீச்சாளர் சச்சினி நிசான்ஷல மற்றும் ஒசாதி ரணசிங்க ஆகியோர் இலங்கை T20 குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20 தொடரின் போட்டிகள் 24, 26 மற்றும் 28ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது.

இலங்கை மகளிர் T20 குழாம்

சாமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, ஹார்சிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, ஒசாதி ரணசிங்க, இனோஷி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, அமா காஞ்சனா, ரஷ்மிக்கா செவ்வந்தி, இமேஷா துலானி, சஷினி கிம்ஹானி, காவ்யா கவிந்தி, சச்சினி நிசன்சல, கௌசினி நுத்யாங்கனா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<