கஜிதவின் அதிரடி சதத்தினால் கேகாலை புனித மரியார் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

201
St. Thomas, Nalanda and St. Benedict's take control

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் குருகுல கல்லூரி, களனி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்று முதல் நாளாக அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய அந்தோனியார் கல்லூரி லசிந்து அரோஷ, சச்சித சமித் மற்றும் உதார ரவிந்துவின் அதிரடி பந்து வீச்சில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய குருகுல கல்லூரி புருத்துவி ருஷாரவின் அரை சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை நிறுதிக்கொண்டது.

40 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் களமிறங்கிய அந்தோனியார் கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்களை பெற்று 59 ஓட்டங்களால் இரண்டாம் இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 103 (39.1) –  ரஷ்மிக்க மெவான் 35, அரிந்த பசிந்து 30, லசிந்து அரோஷ 3/25, சச்சித சமித் 3/10, உதார ரவிந்து 3/10

குருக்குல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 143/7d (23.2) – புருத்துவி ருஷார 63, அவிஷ்க தரிந்து 2/30, துஷார மதுஷான் 2/29, கவிந்து மதுக 2/32

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (இரண்டாம் இன்னிங்ஸ்): 99/4 (26) – அவிஷ்க தரிந்து 35, ரஷ்மிக்க மெவான் 28 


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

புனித தோமியர் கல்லூரியில் ஆரம்பித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய திரித்துவக் கல்லூரி 64.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. புனித தோமியர் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பவித் ரத்நாயக்க 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது சித்தாரா ஹபுஹின்ன ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 71 ஓட்டங்களின் உதவியுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 224 (64.5) – விமங்க சூரியபோல 36, ஷானோகீத் சண்முகநாதன் 35, பூர்ண வனசேகற 23, ஹசிந்த ஜயசூரிய 26, பவித் ரத்நாயக்க 5/54, டெல்லோன் பீரிஸ் 2/40

புனித தோமஸ் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 123/3 (27) – சித்தாரா ஹப்புஹின்ன 71 *


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

கொழும்பு நாலந்த கல்லூரியில் நடைபெற்ற இந்தபோட்டியில் லக்ஷித்த ரசன்ஜனவின் அதிரடி பந்து வீச்சில் மலியதேவ கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய நாலந்த கல்லூரி தசுன் செனவிரத்னவின் 66 ஓட்டங்களின் உதவியுடன் 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 126 (40.3) – தில்ஷான் கொல்லுரே 65, தமித சில்வா 23, லக்ஷித்த ரசன்ஜன 4/13, கழன பெரேரா 3/35, அசெல் குலதுங்க 3/17

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 206 (49) – தசுன் செனவிரத்ன 66, ருசிறு டி சில்வா 27, கழன கத்திரியாராச்சி 27, கசுன் சந்தருவன் 23, தமித சில்வா 5/46, சஞ்ஜீவன் பிரியதர்ஷன 3/57, கவின் பண்டார 2/35

மலியதேவ கல்லூரி, குருநாகல் (இரண்டாம் இன்னிங்ஸ்): 0/0 (1)


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பெனடிக்ட் கல்லூரி திணித்த பஸ்நாயக்க மற்றும் ஷெஹான் பெர்னாண்டோவின் அரைச் சதங்களின் உதவியுடன் 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி இன்றைய நாள் ஆட்டநேர நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்:

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 282 (91.4) – திணித்த பஸ்நாயக்க 64, ஷெஹான் பெர்னாண்டோ 51, டிலான் சதுரங்க 42, சலன சங்கல்ப 30, மகேஷ் தீக்ஷன 21, நிபுன் சுமணசிங்க 4/32, ருச்சிர ஏக்கநாயக்க 2/35

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 3/ 0 (2)


புனித தோமியர் கல்லூரி, மாத்தளை எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை

இரண்டாம் நாளாக தொடர்ந்த இந்தப் போட்டியில் 261 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி, 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்த வகையில் இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

முன்னதாக புனித தோமியர் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 124 ஓட்டங்களுக்கு பதிலாக புனித மரியார் கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்:

புனித தோமியர் கல்லூரி, மாத்தளை (முதல் இன்னிங்ஸ்): 124 (39.1) – சஜித் டி சில்வா 47, பவந்த சமிதசன்ங்க 19, லசித்த உடகே 4/31, தமிந்த கயான் 2/24, திமிர சுபுன் 2/24

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 385/9d (81.4) – கஜித கொட்டுவகொட 127, திமிர சுபுன் 50, சஜீவ ரஞ்சித் 46, லசித்த உடகே 43, மாஸ் ரஹிம் 48, சசிக்க பண்டார 3/42, தீமந்த சேனாநாயக்க 2/71, முஹம்மத் இஸ்மாயில் 2/77

புனித தோமஸ் கல்லூரி, மாத்தளை (இரண்டாம் இன்னிங்ஸ்): 184 (35.4) – லிஹஜ ஜயசுந்தர 94, சஜித் டி சில்வா 71, லசித்த உடகே 4/84, மாஸ் ரஹிம் 2/19, திமிர சுபுன் 2/14 எதிர்

போட்டி முடிவு: புனித மரியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வெற்றி


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை

ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 255 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய தர்மசோக கல்லூரி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் 131 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் மீண்டும் துடுப்பாடுமாறு பணிக்கப்பட்டது. மீண்டும் களமிறங்கிய அவ்வணி சந்துன் மெண்டிஸ் மற்றும்  தனஞ்சய லக்க்ஷானின் அதிரடி பந்து வீச்சில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

போட்டியின் சுருக்கம்:

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 255 (56.1) – தனஞ்சய லக்க்ஷான்  40,  சந்துன் மென்டிஸ் 40, அவிந்து தீக்ஷன 37, கசுன் தாரக 32, ரவிஷ்க விஜயசிரி 30, கவிந்து நதீஷன் 4/61, லொஹான் டி சொய்சா 2/43, உஷான் இமந்த 2/61

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 124 (36.5) – கவீஷ் குமார 37, ஹர்ஷஜித் ருஷாந்த 30, ரவிஷ்க விஜயசிரி 4/24, திலங்க உதீஷன் 2/24, அவிந்து தீக்ஷன 3/19

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (இரண்டாம் இன்னிங்ஸ்): 102 (32.5) – கவீஷ் குமார 37, தினுக்க தில்ஷான் 25, சந்துன் மெண்டிஸ் 3/18, தனஞ்சய லக்க்ஷான் 3/13, ரவிஷ்க விஜயசிரி 2/20, திலங்க  உதீஷன் 2/12

போட்டி முடிவு: ரிச்மண்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் வெற்றி