புதிய பயிற்சியாளரினை நியமனம் செய்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

13
Shukri Conrad

தென்னாபிரிக்க ஆடவர் கிரிக்கெட் அணியினை அனைத்து வகைப் போட்டிகளிலும் பயிற்சியாளராக வழிநடாத்த சுக்ரி கோன்ராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CSA) இன்று (09) வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுக்ரி கோன்ரட்டை அனைத்து வகைப் போட்டிகளிலும் தென்னாபிரிக்க ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட நியமனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது 

>>PSL T20 தொடரினை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றிய பாகிஸ்தான்<<

ஏற்கனவே தென்னாபிரிக்காவின் டெஸ்ட் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த சுக்ரி கோன்ரட் கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பயிற்சியாளராக இருந்த ரோப் வால்டர் தனது பதவியினை இராஜினமா செய்ததனை அடுத்தே தற்போது அனைத்து வகைப் போட்டிகளிலும் தென்னாபிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கின்றார். கோன்ரட்டின் ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் வரையில் செல்லுபடியாகும் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது 

முன்னதாக கோன்ரட்டின் ஆளுகையிலான தென்னாபிரிக்க அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் நடப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். 

>>இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்<<

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் முக்கிய நிர்வாக அதிகாரியான ஏனோச் ங்வே, சுக்ரியின் அனுபவத்தினை அவர் தென்னாபிரிக்க அணியின் மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கும் கொண்டு செல்ல எதிர்பார்ப்புடன் உள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார் 

அதேவேளை அனைத்து வகைப் போட்டிகளுக்கும் பயிற்சியாளராக மாறியதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடைய எதிர்பார்ப்பதாக சுக்ரி கோன்ரட் குறிப்பிட்டுள்ளார் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<