இலங்கை அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தரவரிசையில் ஐந்தாம் இடம்

146

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியல் சர்வதேச கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி 122 மதிப்பீட்டு புள்ளியுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தை பெற்றுள்ளது. அத்துடன் 116 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் தென்னாபிரிக்கா 112 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேவேளை 108 புள்ளிகளடன் நியூஸிலாந்து 4 ஆவது இடத்தையும் இலங்கை 107 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் 101 புள்ளிகளுடன் இங்கிலாந்து 6 ஆவது இடத்தை தனதாக்கியுள்ளது.

இவை தவிர ஏனைய நான்கு இடங்களில் 92 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தானும்இ 81 புள்ளிகளுடன் பங்களாதேஷ்இ 50 புள்ளிகளுடன் சிம்பாப்வே மற்றும் 44 புள்ளிகளுடன் அயர்லாந்து ஆகிய அணிகள் பெற்றுள்ளன.