நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்

535

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன், நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிம் இக்பாலின் சதத்தோடு சம்பியனாக நாமம் சூடிய கொமில்லா விக்டோரியன்ஸ்

ஆறாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடரின்…

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று (09) நடைபெற்ற கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது, சகிப் அல் ஹசன் விரல் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை காரணமாகவே அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

சகிப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணி, பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணியிடம் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத்தை தவறவிட்டது. இந்த போட்டியில், சகிப் அல் ஹசன், டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக துடுப்பெடுத்தாடும் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் 11 ஆவது ஓவரை திசர பெரேரா வீசினார். பௌன்சர் பந்தாக வீசப்பட்ட பந்து, சகிப் அல் ஹசனின் இடதுகை மோதிர விரலில் கடுமையாக தாக்கியது. இதற்கு அடுத்த பந்தில், சகிப் அல் ஹசன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். போட்டியின் பின்னர் சகிப் அல் ஹசனின் விரல் எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவர் டெபசிஷ் சௌத்ரி,

“பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டியை தொடர்ந்து சகிப் அல் ஹசனின் விரல் எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் படி சகிப் அல் ஹசனின் இடதுகை மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவரது காயம் குணமடைவதற்கு சுமார் மூன்று வாரங்கள் ஆகலாம்” என தெரிவித்துள்ளார்.

சகிப் அல் ஹசன் கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து விரல் உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்றார். இவரது விரல் உபாதை கடந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை அவர் போட்டிகளில் பங்கேற்பதை இடைக்கிடையில் தடை ஏற்படுத்தி வந்தது. தற்போது சகிப் அல் ஹசன் மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பங்களாதேஷ் அணியில் இணையும் சபியுல் இஸ்லாம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு … இந்திய அணியுடனான டி20…

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. சகிப் அல் ஹசன் ஒருநாள் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதுடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<