இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவிருக்கும் T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான டிக்கட் விற்பனை ஆரம்பமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
>>இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் “Signature” நிறுவனம்<<
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது இங்கே இரு போட்டிகள் கொண்ட T20I மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளும் பங்கேற்கும் T20I தொடர் இம்மாதம் 09ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், T20I தொடருக்கான டிக்கட் விற்பனை www.srilankacricket.lk என்னும் இணையதள முகவரி ஊடாக தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.
அதேநேரம் டிக்கட்டுக்களை 7ஆம் திகதி முதல் கொழும்பு வித்தியா மாவத்தையிலும், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் T20I போட்டிகள் நடைபெறும் நாட்களில் டிக்கட்டுக்களை தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையிலும் பெற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் T20I தொடரின் பின்னர் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரின் போட்டிகளுக்கான டிக்கட்டுக்களை நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் கண்டி பல்லேகல மைதானத்திலும், ஒருநாள் போட்டி நாட்களில் டிக்கட்டுக்களை பலகொல்ல அபீத்தா மைதானத்திலும் பெற்ற முடியும் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
டிக்கட் விலை விபரம்
T20I போட்டிகள்
ஒருநாள் போட்டிகள்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<