தேசிய கரப்பந்து தெரிவுப் போட்டிக்கு அழைப்பு

293

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கரப்பந்தாட்ட போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு தேசிய ஆடவர் கரப்பந்தாட்ட அணிக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான விசேட தெரிவுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட தெரிவுப் போட்டிகள் இம்மாதம் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் காலி தடெல்ல கரப்பந்தாட்ட இல்ல உள்ளக விளையாட்டுத் தொகுதியில் காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பங்குபெற விரும்பும் அனைத்து வீரர்களும் அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு தடெல்ல கரப்பந்தாட்ட இல்ல உள்ளக விளையாட்டுத் தொகுதிக்கு சமூகமளிக்குமாறு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் 0112669344 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<