ஆசிய லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் – இலங்கை லயன்ஸ் குழாம் வெளியீடு

22

இரண்டாவது முறையாக ஒழுங்கு செய்யப்படவிருக்கும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரில் பங்கெடுக்கும், இலங்கை லயன்ஸ் (Sri Lankan Lions) குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

>>சத்திரசிகிச்சையினால் நியூசிலாந்து T20I போட்டிகளை தவறவிடும் திலக் வர்மா<<

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரருமான திசர பெரேரா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தில், இலங்கையின் முன்னாள் முன்னணி துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, முன்னாள் சுழல் ஜாம்பவான் அஜன்த மெண்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய லெஜன்ட்ஸ் லீக் தொடர் ஜனவரி 19 தொடக்கம் பெப்ரவரி 01ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரின் மைதானங்கள், போட்டி அட்டவணை குறித்த விடயங்கள் காலக்கிரமத்தில் வெளிவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னணி முன்னாள் வீரர்கள் பங்கெடுக்கும் இந்த லெஜன்ட்ஸ் லீக் தொடரின் நடப்புச் சம்பியன்களாக ஆசியன் ஸ்டார்ஸ் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திசர பெரேரா, தனுஷ்க குணத்திலக்க, உபுல் தரங்க, சாமர கபுகெதர, கிஹான் ரூபசிங்க, சீகுகே பிரசன்ன, மலின்த புஸ்பகுமார, செஹான் ஜயசூரிய, திலன் துஷார, நுவான் பிரதீப், நிஷான் சமரகொடி, விக்கும் சஞ்சய, அகலங்க கனேகம, மீவன் பெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், அஜந்த மெண்டிஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<