மீண்டும் கிரிக்கெட் ஆட தயாராக உள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்

2519

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ், கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

மஹேலவால் T20 ஹீரோவான அகில

அதன்படி 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், அணித் தெரிவுக்கு மீண்டும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

நம்பத்தகுந்த தகவல் ஒன்றின் அடிப்படையில், அஞ்செலோ மெதிவ்ஸ் அணித் தெரிவுக்கு தயாராக இருப்பதனை இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திடம் தெரியப்படுத்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

சொந்தக் காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைவெளி ஒன்றினை அஞ்செலோ மெதிவ்ஸ் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறான நிலையொன்றிலேயே மெதிவ்ஸ் தான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஆயத்த நிலையில் இருக்கின்றார் என குறிப்பிட்டிருக்கின்றார்.

LPL வீரர்கள் வரைவில் கெயில், டு பிளசிஸ், ரசல், அப்ரிடி உட்பட 74 வெளிநாட்டு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இணைக்கப்படாது போயினும், அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கான விருப்பம் தெரிவித்திருப்பதால் அவர் T20 உலகக் கிண்ணத்தினை அடுத்து, இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அஞ்செலோ மெதிவ்ஸ் கடைசியாக இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடன் 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதம் ஆடியிருந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…