2021 ஜனவரி ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டை வரும் இங்கிலாந்து அணி

194

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (09) வெளியிட்டது.

.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் இரத்து

குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தனி விமானம் மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்

இதில் இங்கிலாந்து அணி 14 நாட்கள் ஹம்பாந்தோட்டையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவுள்ளனர். இதேநேரம், இலங்கை வரும் இங்கிலாந்து அணி எந்தவொரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடாது

எனினும், ஜனவரி 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளக பயிற்சிப் போட்டிகளில் அந்த அணி பங்குகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்தது.

Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் உடனடியாக சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இலங்கையில் நடைபெறவில்லை

எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடுகின்ற முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் அமையவுள்ளமை சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<