சிறைக் கைதிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சங்கா, மஹானாம

198

சிறைக் கைதிகளும் மனிதர்கள் என வெலிக்கடை சிறைச்சாலை வழியாகச் செல்கின்ற ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொள்ளலாம். பல அர்த்தங்களைக் கொண்ட அந்த வாசகத்துக்கு மேலுமொரு உத்வேகத்தைக் கொடுக்கும் வகையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியைக் குறிப்பிடலாம்அதுமாத்திரமின்றி இப்போட்டியை கண்டுகளித்தவர்களுக்கு சிறைக் கைதிகளும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தான் என்பதை பறைசாற்றியுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சங்கக்காரவினால் யோசனை

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக் கொள்வதற்கான ,..

வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட தலைமை அதிகாரி சந்தன ஏக்கநாயக்கவின் தலைமையில் அங்குள்ள சிறைக் கைதிகளுக்கிடையில் நடைபெற்ற சுதந்திர தின கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஜாம்பவானுமான குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் டெஸ்ட் வீரரும், .சி.சியின் முன்னாள் போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் ஒன்றிணைக்கின்ற, கற்றுக்கொடுக்கின்ற விளையாட்டு மனித குலத்தின் நன்மைக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றதை எவராலும் மறுக்க முடியாது. அது சிறைக் கைதிகளுக்கும் பொதுவான நியதியாகும். மனித உள்ளங்களை ஒன்றிணைத்து ஒரு நொடியில் அனைவரையும் சிந்திக்கச் செய்யும் விதத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இவ்வரலாற்று சிறப்புமிக்க போட்டியை குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம ஆகியோர் நேரில் சென்று கண்டுகளித்த வீடியோ மற்றும் அவர்களின் உரைகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ரொஷான் மஹானாம கருத்து வெளியிடுகையில்,இங்கு விளையாடிய ஒரு சில வீரர்களின் அபார துடுப்பாட்டம் பொதுவாக கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கப்படுகின்ற ஆறு மற்றும் நான்கு ஓட்டங்களைப் போன்றது. உண்மையில் இவர்களிடமும் அபரிமிதமான திறமைகள் காணப்படுகின்றதை இப்போட்டியை கண்டுகளித்த பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.

அவர்கள் ஏதோ ஒரு குற்றத்துக்காக சிறைக் கைதிகளாக இருந்தாலும், விளையாட்டில் அவர்களிடம் உள்ள ஆர்வமும், திறமையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது. எனவே சிறைச்சாலை நிர்வாகத்தினால் அவர்களுடைய விளையாட்டு திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இலங்கை அணி எதிர்வரும் மே மற்றும் ஜுன் …

இதேநேரம், இங்குள்ள சிறைக் கைதிகளின் திறமைகளைப் பார்த்து வியந்து போனேன். இங்கு வரும்போது சிறைச்சாலையில் இவ்வாறானதொரு சூழல் இருக்குமா என்பதை ஒரு நொடி கூட நான் யோசித்துப் பார்க்கவில்லை. அவர்களுடைய விளையாட்டு திறமைகளைப் போல அவற்றை மேலும் வளர்ப்பதற்குத் தேவையான மனநிலையை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்த சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி சந்தன ஏக்கநாயக்க அங்கு கருத்து வெளியிடுகையில்,சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகளின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சிறைச்சாலை நிர்வாகம், இவ்வாறான கிரிக்கெட் தொடரொன்றை ஏற்பாடு செய்து அதற்கு பிரதம விருந்தினர்களாக கிரிக்கெட் உலகின் கனவான்களான குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோரை அழைப்பதற்கு தீர்மானித்தோம்.

கிரிக்கெட் உலகில் இலங்கைக்காக அளப்பரிய சேவையாற்றி பெருமையையும், கௌரவத்தையும் பெற்றுக்கொடுத்த சங்கக்கார மற்றும் மஹானாம ஆகியோர் எப்போதும் கனவான்களாவே இருந்தனர். இதை இங்குள்ள சிறை கைதிகளுக்கு நான் பல தடவைகள் எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

சுமார் 27 வருடகாலம் சிறைவாசம் அனுபவித்த பிறகு தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா தெரிவானார். விளையாட்டின் மூலமாகத்தான் கனவான்கள் உருவாகுவார்கள் என்பதே அவருடைய தாரகமந்திரமாக இருந்ததுடன், 1997ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்கா வெல்ல வேண்டும் என்பது அவருடைய ஒரே குறிக்கோளாகவும் இருந்தது. அத்துடன் அதன் இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிக்க அவர் தென்னாபிரிக்க ரக்பி அணியின் ஜேர்சியை அணிந்துகொண்டு மைதானத்துக்கும் சென்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக…

அதேநேரம் தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்தவர்கள் மாத்திரம் இடம்பெறவேண்டும் என ஒரு சிலர் தெரிவிக்கும் போது, அதற்கு முற்றுமுழுதாக மறுப்பினை தெரிவித்த அவர், விளையாட்டில் அனைத்து இனத்தவர்களும் தமது தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கோட்பாட்டினையும் மனித உலகிற்கு முன்வைத்தார்” என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையின் செபல் பிரிவு மற்றும் எல் பிரிவுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மரண தண்டனை மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனைகளைப் பெற்றுக்கொண்ட கைதிகளை பிரிதிநிதித்துவப்படுத்திய செபல் பிரிவு சம்பியனாகத் தெரிவாகியது. வெற்றி பெற்ற அணியினருக்கு கிண்ணங்களையும், பரிசில்களையும் குமார் சங்கக்கார உள்ளிட்டோர் இதன்போது வழங்கி வைத்தனர்.