இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுடனான T20i தொடர்களில் பங்கெடுக்கும் இங்கிலாந்து அணிக்குழாம்களை வெளியிட்டுள்ளது.
>>முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் மோதும் இலங்கை<<
இங்கிலாந்து T20i அணியில் முக்கிய உள்ளடக்கமாக நீண்ட இடைவெளியின் பின்னர் இளம் சகலதுறைவீரர் சேம் கர்ரனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேம் கர்ரன் இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான T20 பிளாஸ்ட் தொடரில் சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தியனை அடுத்து, இங்கிலாந்து T20i குழாத்தில் வாய்ப்பினை பெற்றுள்ளார். 27 நிரம்பிய சேம் கர்ரன் இந்தப் பருவ தொடரில் 15 போட்டிகளில் 365 ஓட்டங்களுடன், 21 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பென் டக்கட்டிற்கு இங்கிலாந்து T20 குழாத்தில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷஸ் தொடரினை கருத்திற் கொண்டு வேகப்பந்துவீச்சாளர் மெதிவ் பொட்ஸிற்கும் இங்கிலாந்து குழாம் ஓய்வு வழங்கியிருக்கின்றது.
இங்கிலாந்து குழாம் (எதிர் தென்னாபிரிக்கா)
ஹர்ரி புரூக் (தலைவர்), ரெஹான் அஹ்மட், ஜொப்ரா ஆர்ச்சர், டொம் பென்டன், ஜெக்கப் பெதல், ஜோஸ் பட்லர், ப்ரைடன் கார்ஸ், சேம் கர்ரன், லியம் டாவ்சன், வில் ஜேக்ஸ், சகீப் மஹ்மூட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீட், பில் ஷோல்ட், ஜேமி ஸ்மித், லூக் வூட்
இங்கிலாந்து குழாம் (எதிர் அயர்லாந்து)
ரெஹான் அஹ்மட், ஜொப்ரா ஆர்ச்சர், டொம் பென்டன், ஜெக்கப் பெதல் (தலைவர்), ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், லியம் டாவ்சன், வில் ஜேக்ஸ், சகீப் மஹ்மூட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீட், பில் ஷோல்ட், லூக் வூட், ஜொர்டன் கோக்ஸ், சோன்னி பேக்கர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















