SAFF சம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

296

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் மாலைதீவுகளில் நடைபெறவுள்ள 2021 தெற்காசிய நாடுகளின் கால்பந்து சம்பியன்ஷிப் (SAFF) தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இரண்டு வருட ஒப்பந்தத்தில் PSG யுடன் இணைந்தார் மெஸ்ஸி

அதன்படி இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவு என ஐந்து நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இம்முறை தொடரின் போட்டிகள் மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் அமைந்திருக்கும் தேசிய கால்பந்து அரங்கில் இடம்பெறவிருக்கின்றன. 

இந்த தொடரின் முதல் போட்டியில் ஒக்டோபர் 01ஆம் திகதி நேபாள அணி, தொடரினை நடாத்தும் மாலைதீவுகள் அணியினை எதிர்கொள்ளவுள்ளதோடு, இலங்கை கால்பந்து அணி அதேநாளில் தமது முதல் போட்டியினை பங்களாதேஷ் அணியுடன் ஆடவிருக்கின்றது. 

Video – பல்வேறு திருப்பங்களுடன் ஆரம்பமான கழக கால்பந்து | FOOTBALL ULAGAM

இம்முறை தொடரில் பூட்டான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்காத காரணத்தினால் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றில் அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்றின் நிறைவில், முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஒக்டோபர் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள தொடரின் இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் அட்டவணை (இலங்கை நேரப்படி) 

ஒக்டோபர் 01, 2021  

  1. நேபாளம் எதிர் மாலைதீவு – மாலை 4.30 மணி 
  2. இலங்கை எதிர் பங்களாதேஷ் – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 03, 2021

  1. பங்களாதேஷ் எதிர் இந்தியா – மாலை 4.30 மணி
  2. இலங்கை எதிர் நேபாளம் – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 06, 2021

  1. இந்தியா எதிர் இலங்கை – மாலை 4.30 மணி
  2. மாலைதீவு எதிர் பங்களாதேஷ் – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 08, 2021 

  1. மாலைதீவு எதிர் இலங்கை – மாலை 4.30 மணி
  2. நேபாளம் எதிர் இந்தியா – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 11, 2021

  1. பங்களாதேஷ் எதிர் நேபாளம் – மாலை 4.30 மணி
  2. இந்தியா எதிர் மாலைதீவு – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 13, 2021

இறுதிப் போட்டி – இரவு 8.30 மணி 

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க…