ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

113

இந்திய டெஸ்ட் அணித்தலைவர், ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

MCA சுபர் T20 தொடரின் சம்பியன்களாக ஜோன் கீல்ஸ்

ரோஹித் சர்மாவிற்கு நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததோடு, அவர் இப்போது மருத்துவ உதவிகளுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) குறிப்பிட்டிருக்கின்றது.

தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் காணப்படும் ரோஹித் சர்மா, லெய்செஸ்டர்ஷைர் (Leicestershire) அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆடியிருந்ததோடு, அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 23 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை போராடி தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி!

இதேநேரம் ரோஹித் சர்மாவின் கொவிட்-19 வைரஸ் தொற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் பங்கெடுப்பதிலும் சந்தேகத்தினை தோற்றுவித்திருக்கின்றது.

மறுமுனையில் KL ராகுலையும் தொடைத் தசை உபாதை காரணமாக ஏற்கனவே இழந்திருக்கும் இந்திய அணி நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா மூலம் வழிநடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<