உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்

India tour of England 2025

27
Rishabh Pant injury

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளான ரிஷப் பண்ட் பாதியில் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார். 

முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

>>கவுண்டி அணியில் இந்திய வீரரிற்குப் பதிலாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்<<

இதில் ரிஷப் பண்ட் துடுப்பெடுத்தாடும் போது, கிரிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் ரிவர்ஸ்-ஸ்வீப் ஆட முற்பட்ட நிலையில் அவருடைய காலில் பந்து தாக்கியது. 

பந்து தாக்கிய பின்னர் ஆட்டமிழப்புக்கான மேன்முறையீடு செய்யப்பட்ட போதும், அது ஆட்டமிழப்பு இல்லை என மூன்றாவது நடுவர் அறிவித்ததுடன், பந்து மட்டையில் பட்டு காலில் பட்டதை உறுதிசெய்தார். 

எனினும் பந்து ரிஷப் பண்ட்டின் வலது கணுக்கால் அருகில் தாக்கியதில் அதிக வலியேற்பட்டதுடன், காலில் வீக்கமும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக தொடர்ந்தும் துடுப்பெடுத்தாட முடியாமல் களத்திலிருந்து வாகனம் ஒன்றின் மூலம் வெளியேறியிருந்தார். 

ரிஷப் பண்ட உபாதைக்கான சிகிச்சைகளுக்கு முகங்கொடுத்துவரும் இவர், மீண்டும் களமிறங்கி துடுப்பெடுத்தாடுவாரா? என்பது தொடர்பில் கேள்வியெழுந்துள்ளது. 

சாய் சுதர்ஸனுடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<