ஆசிய ஹொக்கி கிண்ண தகுதிகாணில் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் தோல்வி

2025 Women's AHF Cup

21

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹொக்கி கிண்ண தகுதிகாண் தொடரில் இன்று (23) நடைபெற்ற சீன தாய்ப்பே அணியுடனான போட்டியில் 5–1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை மகளிர் ஹொக்கி அணி, இறுதிப் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் இழந்தது.

சிங்கப்பூர், ஹொங்கொங் சைனா, சைனீஸ் தாய்ப்பே, உஸ்பெகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய ஹொக்கி கிண்ண தகுதிகாண் தொடர் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இலங்கை மகளிர் ஹொக்கி அணி, தனது முதலாவது போட்டியில் ஹொங்கொங் மகளிர் அணியிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து சிங்கப்பூர் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை அணி, உஸ்பெகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமப்படுத்தியது.

இந்த நிலையில், இலங்கை மகளிர் ஹொக்கி அணி இன்று சீன தாய்ப்பே அணியை எதிர்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே இலங்கை மகளிர் அணிக்கு சவாலைக் கொடுத்த சீன தாய்ப்பே அணி, முதல் கால் மணி ஆட்ட நேரத்தில் ஒரு கோலையும், இரண்டாவது கால் மணி ஆட்ட நேரத்தில் 2ஆவது கோலையும் போட்டு 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

உலக புகழ்பெற்ற Motopark அணியில் இணையும் யெவான் டேவிட்

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கால் மணி ஆட்ட நேரத்தின்போது 4 நிமிட இடைவெளியில் சீனா தாய்ப்பே வீராங்கனைகள் 2 கோல்களைப் போட, போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இலங்கைக்கான முதல் கோலை நிபுனி பெர்னாண்டோ பெற்றுக் கொடுத்தார். இதன்படி, மூன்றாவது கால் மணி ஆட்ட நேரம் நிறைவடையும் போது 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சீன தாய்ப்பே அணி முன்னிலை வகித்தது.

எனினும் கடைசி கால் மணி நேர ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் யே சூ-கின் சீன தாய்ப்பேக்கான 5ஆவது கோலை அடிக்க, 5-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சீன தாய்ப்பே வெற்றயீட்டி

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, இந்த தொடரில் பெற்றுக்கொண்ட 3ஆவது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

இலங்கை மகளிர் அணி தனது கடைசி லீக் போட்டியில் இந்தோனேசியாவை நாளை (24) வியாழக்கிழமை (12) எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவினால் ஏப்ரல் 26, 27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள அணிகளை நிரல்படுத்தும் போட்டியில் விளையாட நேரிடும்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<