இம்முறையும் சம்பியன் கனவுகளுடன் றோயல் செலஞ்சர்ஸ்

122

சம்பியன் பட்டக்கனவுகளுடன், வழமையாக இந்தியப் பிரிமியர் லீக் (IPL) தொடரில் களமிறங்கி பின்னர் ஏமாற்றத்தினைச் சந்திக்கும் றோயல் விராட் கோலியின் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு, நடைபெறவிருக்கும் 14ஆவது பருவகாலத்திற்கான IPL தொடரிலும் பாரிய சவால் ஒன்று காத்திருக்கின்றது.

முதல் போட்டி – எதிர் மும்பை இந்தியன்ஸ் (ஏப்ரல் 9, சென்னை)

மும்பை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19

பலம் கொண்ட வீரர்கள் என்னும் அளவீடை வைத்து நோக்கினால் அதிக புள்ளிகளை எடுக்க கூடிய அணியாக இருக்கும், விராட் கோலி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் அணியினர் கடந்த பருவகாலத்தில் (2020) நடைபெற்ற IPL தொடரில் பிளேஒப் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியதோடு, இந்த ஆண்டும் தமது கன்னி IPL சம்பியன் பட்டக்கனவுகளுடன் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்.

இந்த ஆண்டு விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் பார்திவ் படேல் அடங்கலாக பல முன்னணி வீரர்களை விடுவித்திருக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணி, தமது குழாத்தில் நியூசிலாந்தின் சகலதுறைவீரர் கைல் ஜேமிசன் மற்றும் அவுஸ்திரேலிய சகலதுறை நட்சத்திரம் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரினை இணைத்திருக்கின்றது. இவ்வாறு புதிய சேர்க்கைகளாக அவ்வணிக்கு மாறியிருக்கும் வீரர்கள் இந்தமுறைக்கான தொடரில் பாரிய பங்கு ஒன்றினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் இந்த ஆண்டுக்கான தொடரில் ப்ளே ஒப் சுற்றுக்கு முன்னேற எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக றோயல் செலஞ்சர்ஸ் அணியும் காணப்படுகின்றது.

பலம் 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரர்களாக இருக்கும் பல முன்னணி வீரர்கள் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இந்த வீரர்களின் சேர்க்கை அவ்வணிக்கு எந்த அணியினையும் எந்த சந்தர்ப்பத்திலும் தோற்கடிக்கும் ஆற்றலை வழங்கியிருப்பது அவ்வணியின் மிகப் பெரிய பலமாகும். 

இந்த தொடரினை வெற்றிகரமாக மாற்றுமா சென்னை சுபர் கிங்ஸ்?

அணித்தெரிவு

IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் முதல் பதினொருவர் அணியினையும், அவ்வணிக்கு தொடர் முழுதும் பங்களிப்புச் செய்ய எதிர்பார்க்கப்படும் வீரர்களையும் நோக்கும் போது அணித்தலைவர் விராட் கோலி, ஏ.பி.டி. வில்லியர்ஸ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் முதன்மையானவர்களாக காணப்படுகின்றனர்.

இதேநேரம் புதிய உள்ளடக்கங்களாக மாறிய கிளேன் மெக்ஸ்வெல், கைல் ஜேமிசன் மற்றும் அடம் ஷம்பா போன்ற வீரர்களும் அணியில் முக்கிய பங்கு ஒன்றினை எடுத்துக் கொள்வர்.

முழுமையான அணிக்குழாம்

விராட் கோலி (அணித்தலைவர்), ஏ.பி.டி. வில்லியர்ஸ், டேவ்டட் படிக்கல், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், மொஹமட் சிராஜ், நவ்தீப் சைனி, பவான் தேஷ்பாண்டே, சஹ்பாஸ் அஹமட், ஹர்ஷல் படேல், ஜோஸ் ப்லிப்பே, அடம் ஷம்பா, கேன் ரிச்சரட்ஸன், டேனியல் ஷேம்ஸ், டேனியல் சேம்ஸ், சச்சின் பேபி, ராஜட் பட்டிதார், மொஹமட் அஸ்காருதீன், கைல் ஜேமிசன், டேன் கிறிஸ்டியன், சுயேஸ் ப்ரபுதேஷாய், KS. பராட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளுக்கு<<