இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள்

93

இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 

முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது. இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன

T10 லீக் கிரிக்கெட் தொடரில் மூன்று இலங்கை வீரர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள T10 லீக் கிரிக்கெட்…

முன்னாள் மற்றும் ஆடிவரும் வீரர்களின் பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்படுவது இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அரிதான ஒன்றல்ல. மிக அண்மையில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனம் பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தின் அரங்கு ஒன்றுக்கு விராட் கொஹ்லியின் பெயரை சூட்டியது. அது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று சரியாக 11 ஆண்டுகளில் இந்திய அணித் தலைவரை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

கண்டியில் பல்லேகல அரங்கிற்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட மத்திய மாகாண சபை முன்னதாக அறிவித்திருந்தபோதும் அது இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<