மீண்டும் IPL இடைவெளியில் 2026ஆம் ஆண்டின் PSL தொடர்

9

2026ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரானது அந்த ஆண்டின் மார்ச் 26ஆம் திகதி தொடக்கம் மே 3ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PSL தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள திகதிகள், இம்முறையும் 2026ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் நடைபெறும் வழமையான போட்டி அட்டவணை திகதிகளுக்குள் இம்முறையும் மோதி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உடல்நலக்குறைவினால் தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் அக்ஷார் பட்டேல்

IPL தொடரானது வழக்கமாக மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும் நிலையில், PSL தொடரின் 11ஆவது பருவத்தின் திகதிகளும் அதனுடன் மோதும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டிலும் இதே காலகட்டத்தில் PSL தொடர் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது ஆண்டாக இந்த இரு T20 லீக்குகளும் ஒரே கால இடைவெளியில் நடைபெறவுள்ளன.

PSL தொடர் பொதுவாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும். ஆனால், 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. T20 உலகக் கிண்ணத் தொடர் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளதால், PSL தொடரின் போட்டி அட்டவணையை மாற்ற வேண்டிய கட்டாயம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இளையோருக்கு த்ரில் வெற்றி

அதேவேளை புதிய பருவத்திற்கான PSL தொடரில் ஆறு அணிகளில் இருந்து எட்டு அணிகள் பங்கெடுக்கும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார். புதிய அணிகளுக்கான ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளதோடுஇந்த 11வது பருவத்திற்கான தொடர், 39 நாட்கள் கொண்டதாக PSL வரலாற்றிலேயே மிக நீண்ட தொடராக இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<