சதம் விளாசி அசத்திய டில்ஷான் முனவீர, மினோத் பானுக்க

97

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) – இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையில் நடாத்தும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (7) ஐந்து போட்டிகள் ஆரம்பாகியிருந்தன. 

இன்று ஆரம்பமான போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் பலர் தங்களது திறமையினை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிலியந்தலை மத்திய கல்லூரிக்கு எதிராக சென். ஜோன்ஸ் இலகு வெற்றி

சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு…

இலங்கை கிரிக்கெட் இனம் கண்ட, அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்ஷான் முனவீர SSC அணிக்கு எதிரான போட்டியில் நீர்கொழும்பு அணிக்காக சதம் தாண்டி 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த 120 ஓட்டங்கள் டில்ஷான் முனவீரவின் 9 ஆவது முதல்தர சதமாகவும் அமைந்திருந்தது. 

அதேவேளை, கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மினோத் பானுக்க, BRC அணிக்கு எதிராக 108 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் இந்த ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். அதேநேரம், மினோத் பானுக்கவின் சக அணி வீரரான வனிந்து ஹஸரங்கவும் அரைச்சதம் தாண்டி 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

NCC அணிக்காக விளையாடிவரும் பெதும் நிஸ்ஸங்க பெற்ற 123 ஓட்டங்கள் இன்றைய நாளுக்கான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வீரர் ஒருவர் பெற்ற மூன்றாவது சதமாக மாறியது. மறுமுனையில், NCC அணிக்காக முதல்தரப் போட்டிகளில் மீண்டும் களமிறங்கியுள்ள உபுல் தரங்க, அரைச்சதம் தாண்டி 69 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

இலங்கை இராணுவப்படை அணிக்காக விளையாடிவரும் அசேல குணரத்ன கோல்ட்ஸ் அணிக்கு எதிரான மோதலில் இன்று 87 ஓட்டங்கள் பெற்று, இந்தப் பருவகாலத்திற்கான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தினைப் பதிவு செய்தார். எனினும், கோல்ட்ஸ் அணி சார்பில் விளையாடிய தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற இராணுவப்படை அணியினர் 270 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். 

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட….

தில்ருவான் பெரேரா போன்று பந்துவீச்சில் திறமையினை வெளிப்படுத்திய மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான துவிந்து திலகரட்ன BRC அணிக்காக 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாந்து சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக 5 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதல் நாள் போட்டிகளின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (63.2) – தரங்க பரணவிதான 45, அசித்த பெர்னாந்து 5/50, திக்ஷில டி சில்வா 4/42

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 92/2 (21) – லசித் குரூஸ்புள்ளே 53

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

இடம் – SSC மைதானம், கொழும்பு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 338/5 (90) – டில்ஷான் முனவீர 120, அஷேன் சில்வா 66

Photos: SSC Vs Negombo CC | Major League Tier A Tournament 2019/20

NCC எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

இடம் – NCC மைதானம், கொழும்பு

NCC (முதல் இன்னிங்ஸ்) – 403/6 (90) – பெதும் நிஸ்ஸங்க 129, உபுல் தரங்க 69, அஞ்செலோ பெரேரா 51

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270 (89.3) – அசேல குணரத்ன 87, ஹிமாஷ லியனகே 73, தினேஷ் சந்திமல் 44, டில்ருவான் பெரேரா 5/58

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இடம் – BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 416 (77.1) – மினோத் பானுக்க 108, ரொன் சந்திரகுப்தா 95, துவிந்து திலகரட்ன 6/102, தரிந்து கெளஷால் 4/125

BRC (முதல் இன்னிங்ஸ்) – 24/0 (8)

இப்போட்டிகள் அனைத்தினதும் இரண்டாம் நாள் நாளை தொடரும்


>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<