பந்துவீச்சில் அசத்திய மலிந்த புஷ்பகுமார, சச்சித்ர சேனநாயக்க

76

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (1) ஐந்து போட்டிகள் நிறைவடைந்தன.

இன்று நிறைவடைந்த போட்டிகளில் லஹிரு திரிமான்ன 2 இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச்சதத்துடன் றாகம கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 83 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்தது.

இதேநேரம், சமநிலையில் முடிவடைந்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பதுரெலிய விளையாட்டுக் கழகம் இடையிலான மோதலில், செரசன்ஸ் கழக வீரர்களான ப்ரமோத் மதுவந்த, கமிந்து கனிஷ்க ஆகிய இரண்டு வீரர்களும் சதம் விளாசியிருந்தனர். இதில், மதுவந்த 127 ஓட்டங்கள் பெற, கமிந்து கனிஷ்க 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இவர்களோடு NCC அணியின் வீரரான பத்தும் நிஸ்ஸங்க 135 ஓட்டங்கள் பெற்று இன்றைய நாளில் சதம் பெற்ற மற்றுமொரு வீரராக மாறினார்.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான அரைச்சதம் விளாசிய போதும் அவரது அணியான தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமும், NCC அணியும் விளையாடிய போட்டி சமநிலை அடைந்தது.

பந்துவீச்சினை நோக்கும் போது இராணுவப்படை அணிக்காக ஆடிவரும் சுழல் பந்துவீச்சாளரான சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். எனினும், சச்சித்ர சேனநாயக்கவின் SSC அணி இராணுவப்படை விளையாட்டுக் கழகத்துடன் விளையாடிய போட்டி சமநிலை அடைந்தது.

சச்சித்ர சேனநாயக்க போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார இன்று 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். எனினும், மலிந்த புஷ்பகுமாரவின் கொழும்பு கிரிக்கெட் கழக அணியும், சோனகர் கிரிக்கெட் கழக அணியும் விளையாடிய போட்டியும் சமநிலையில் நிறைவுற்றது.

போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழகம்

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 204 (62.2) – லஹிரு திரிமான்ன 97, நிமேஷ் விமுக்தி 6/62

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (60.5) – லசித் குரூஸ்புள்ளே 99, அமில அபொன்சோ 5/98

றாகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 352/6d (70) – சமிந்த பெர்னாந்து 99, உதார ஜயசுந்தர 80, லஹிரு திரிமான்ன 66

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 205 (60.2) – யாஷ் கோத்தாரி 51, நிஷான் பீரிஸ் 5/70, அமில அபொன்சோ 4/84

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 83 ஓட்டங்களால் வெற்றி

SSC எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 229 (71) – சம்மு அஷான் 77*, ஜனித் சில்வா 4/53

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 274 (80) – ஹிமாஷ லியனகே 90*, சச்சித்ர சேனநாயக்க 5/56

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 226 (62.4) – சம்மு அஷான் 44, துஷான் விமுக்தி 4/57

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 125/8 (24) – சச்சித்ர சேனநாயக்க 4/78

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

இடம் – கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 547 (133.4) – பவன் ரத்நாயக்க 164*, லஹிரு மதுஷங்க 89, சத்துர ரன்துனு  3/188, சச்சித்ர சேரசிங்க 2/62

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405 (106.5) – ரமேஷ் மெண்டிஸ் 85, மலிந்த புஷ்பகுமார 5/139

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 68/4 (10.5) – மலிந்த மதுரங்க 37*

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

Photos: CCC Vs Moors SC – Major League Tier A Tournament 2019/20

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 365 (94.4) – சஹீட் யூசுப் 142, கமிந்து கனிஷ்க 4/54

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 496/6d (153.1) – ப்ரமோத் மதுவன்த 127, கமிந்து கனிஷ்க 121*, புத்திக்க சஞ்சீவ 2/100

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

NCC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

Photos: NCC Vs Tamil Union C & AC – Major League Tier A Tournament 2019/20

இடம் – NCC மைதானம், கொழும்பு

NCC (முதல் இன்னிங்ஸ்) – 339 (69.2) – பெதும் நிஸ்ஸங்க 94, பிரமோத் லியனகமகே 4/67

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 446 (124.5) – மனோஜ் சரத்சந்திர 165*, தரங்க பரணவிதான 68, லசித் எம்புல்தெனிய 3/106

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 402/8 (71) – பெத்தும் நிஸ்ஸங்க 135, அஞ்செலோ பெரேரா 99, ஹசித போயகொட 51*, ஜீவன் மெண்டிஸ் 2/81

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<