இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம்!

New Zealand tour of Sri Lanka 2024

40
Nishan Peiris Replaces Vishwa Fernando for 2nd Test

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.

களத்தடுப்பு பயிற்சியில் ஈடுபடும் போது விஷ்வ பெர்னாண்டோவுக்கு தொடை தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டிருந்த நிலையில், அவர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>>விறுவிறுப்பை அடைந்துள்ள இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட்<<

குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள விஷ்வ பெர்னாண்டோ உயர் செயற்திறன் மையத்தில் இணைந்து, உபாதைக்கான சிகிச்சைகள் மற்றும் உபாதையிலிருந்து மீளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.

விஷ்வ பெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நிசான் பீரிஸ் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்த போதும், விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் 41 முதற்தர போட்டிகளில் விளையாடி 172 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<